google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஔவையார்
ஔவையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஔவையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மே, 2026

அவ்வையார் யார்?

இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர். சங்க காலத்தில் ஒர் ஔவையார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால், சங்க காலத்து அதிகமான் எனனும் வள்ளல் கொடுத்த நெல்லிக் கனியை உண்டு பல்லாண்டுகள் வாழ்ந்தவர் என்று கருதினால் ஒரே ஒளவையார் தாம் இருந்தனர் என்று யூகிக்கலாம். ஔவையார் என்பது பாட்டியார் என்ற பொருள் தருதலின், இவரது முதுமையை உணரலாம். இந்த அம்மையார் இளைஞர்கட்கும் முதியர்கட்கும் உகந்த பல டாடல்களைப் பாடியவர். சைவ நெறியினர். இவர் பல வள்ளல்களைப் பாடியவர். கூழுக்குப் பாடியவர் ஒளவையார் என்பதால் இவ்வம்மையாரது பண்பாடு நன்கு புலனாகும். இவர் பாணர் குடியினரால் எடுத்து வளர்க்கப்பட்டதாகக் கூறுவர். ஆதி, பகவன் என்ற இருவர்க்கும் பிறந்த எழுவருள் ஒருவர் இவர் என்ற வரலாறும் உண்டு. இவரால் பாடப்பட்ட பாடல்கள் பல. அகத்தில் ஐந்து, குறுந்தொகையில் பதினைந்து, நற்றிணையில் ஏழு, புறத்தில் பதினேழு, உண்டு. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வாக்குண்டாம், அசதிகோவை, பந்தனந்தாதி, ஞானக்குறள், வினாயகர் அகவல் முதலிய தனி நூற்களும், இவைகளே அன்றி மற்றும் பல நூல்களும் இவர் பெயரால் வழங்கப்படுகின்றன. இவர் பல தனித்தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அவற்றைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம்.

Gemini Generated Image


வியாழன், 18 நவம்பர், 2021

கோபம் மூன்று வகை

ஔவையார் பாடிய மூதுரை 23

பாடல் :

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.  

எளிமைப் படுத்தப்பட்ட பாடல் :

கல் பிளவோடு ஒப்பர் கயவர் 
கடுஞ்சினத்துப் 
பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே 
வில் பிடித்து 
நீர் கிழிய எய்த வடுப்போல 
மாறுமே 
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

பொருள்:

பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள்.

பிரிந்த தங்கத் துகள்கள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீர் ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.

சனி, 31 அக்டோபர், 2020

நல்வழி வெண்பா 24


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை. 

                        __ ஔவையார், நல்வழி, வெண்பா 24

விளக்கம்: 
திருநீற்றை அணியாத  நெற்றி வீணானதாகும். நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும். நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும். ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும். நற்குணம் கொண்ட மனைவி இல்லாத வீடு வீணானதாகும்.

 கருத்து:

திருநீற்றால் நெற்றியும், நெய்யால் உணவும், நதியால் ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், கற்புடைய மனைவியால் வீடும் சிறப்படையும்.

வியாழன், 29 அக்டோபர், 2020

நல்வழி வெண்பா 25

 

ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

                                                                                             __ ஔவையார்

 

விளக்கம்: 
ஒருவன் தன் வருவாயை விட மிகுதியாகச் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும். போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போலப் பாவித்துத் தவிர்ப்பர். ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...