google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: இராமன்
இராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 நவம்பர், 2020

தீபாவளியும் திருக்கார்த்திகையும்

 

தீபாவளி, ஒரு சமஸ்கிருதப் பெயராகும். திருக்கார்த்திகை, ஒரு தூய தமிழ்ப் பெயராகும்.

விளக்குகளின் வரிசைக்கு சமஸ்கிருதத்தில் தீபாவளி என்று பெயர். தீபம்  +  ஆவளி = தீபாவளி. இராமன் வனவாசம் என்னும் காட்டு வாழ்க்கையை முடித்து நாடு திரும்பும் போது அயோத்தி மக்கள் வரிசையாக விளக்கேற்றி வரவேற்றனர் என்பது தீபாவளிக்கான பல கதைகளுள் ஒன்று. தமிழ்நாட்டுக் கதை நீங்கள் அறிந்ததே.

இதைவிடச் சிறந்த பல்வேறு வகையான தீபங்களின் கண்கவர் ஒளிமிகு வரிசைகளை  நாம் திருக்கார்த்திகை இரவில் எங்கும் காணலாம்.

திங்கள், 12 மார்ச், 2018

சூர்ப்பணகையின் நடையழகு



பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

பொருள்:
இராமனும், இலக்குவனும், சீதையும் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது சூர்ப்பணகை (சூர்ப்பனகை, சூர்ப்பநகை) வந்தாள்; உள்ளத்திலே வஞ்சக எண்ணம் கொண்டு அழகியதோர் வடிவம் எடுத்து வந்தாள்; விஷம் என்று சொல்லும்படி வந்தாள்; அன்னம்போல நடந்து வந்தாள்; செம்பஞ்சும் குளிர் தளிர்களும் வருந்த செக்கச் செவேல் என்ற சிவந்த தாமரை போன்ற தனது சிறிய அடிகளை எடுத்து மெல்ல மெல்ல வைத்து இளமயில் போல வந்தாள்.

அரக்கி வடிவத்தோடு சென்றால் இராமன் தன்னைப் பார்க்க மாட்டான் என்று ஒரு அழகிய பெண் வடிவில் சூர்ப்பணகையானவள்  இராமனை அணுகுகிறாள்.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...