google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பிப்ரவரி 2020

வியாழன், 6 பிப்ரவரி, 2020

கலப்பட எண்ணெய் கவனம்




பொதுவான தகவல்கள்

நீங்கள் வாங்கும் சமையல் எண்ணெயின் தரம் பற்றி அறிவதுடன், எண்ணெய் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களையும் கவனிக்க வேண்டும்.

நம் நாட்டில் எள், நிலக்கடலை போன்றவற்றின் விவசாய உற்பத்தி குறைந்து அவற்றை இறக்குமதி செய்கிறோம்.

மூளை, நரம்புகளுக்கு தேங்காய், நெய், எண்ணெய்கள் மூலம் கிடைக்கும் நல்ல கொழுப்பு ஓர் அளவுக்குத் தேவை. ஆனால், அது கலப்படம் செய்யும் போது நல்ல கொழுப்பு கிடைக்காது.

சமீபத்தில் மதுரை கீழமாசிவீதி மார்க்கெட்டிலுள்ள 23 கடைகளில் நல்லெண்ணெய், கடலெண்ணெய் மாதிரிகளை சோதனைக்கு எடுத்தனர் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள். அந்த 63 மாதிரிகளை சென்னையிலுள்ள அரசு ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததில், 61-ல் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 23 கடைகளில் ஒரேயொரு கடைக்காரர் மட்டுமே கலப்படம் இல்லாத எண்ணெயை விற்றுள்ளார்.

நல்லெண்ணெய் தயார் செய்யும்போது எள்ளுடன் கருப்பட்டியைக் கலக்க வேண்டும். கருப்பட்டி விலை அதிகம் என்பதால் மொலாசஸ்ஸையும் சில ரசாயனப் பொருள்களையும் கலந்தே தயாரிக்கிறார்கள்.

சுத்தமான தேங்காய் எண்ணெய், வெப்பநிலை குறையும் போது உறைந்து விடும். பாத்திரத்தின் அடியில், கொழுப்பு போல் படியும். கலப்பட எண்ணெய் அவ்வாறு படிவதில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெய், அதிக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். கலப்பட எண்ணெய் அவ்வாறு இருக்காது.

கச்சா எண்ணெயில் இருந்து, பெட்ரோல், சமையல் எரிவாயு, டீசல், தார் உள்ளிட்ட பொருட்களை பிரித்து எடுக்கப்பட்ட பின், கிடைக்கும் மினரல் ஆயில், என்ற வாசனையில்லாத, நிறமில்லாத, பசை தன்மையில்லாத எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்படுகின்றன.

எண்ணெய் வித்துகளை  இயந்திரங்களில் அதிக அழுத்தம் கொடுத்து அரைக்கும்போது வெளிப்படும் வெப்பத்தினால் இயற்கைத் தன்மையை இழக்க நேரிடுகிறது.

மரச்செக்கில் இயற்கையாக தயாரிக்கப்படும் எண்ணெய் பார்ப்பதற்கு அடர் நிறத்தில் கசடுகளோடு இருக்கும்.

மரச்செக்கினால் குளிர் அழுத்த முறையில் எண்ணெய் தயாரிக்கப்படும் போது வெப்பநிலை சமநிலைப்படுத்தப்பட்டு, எண்ணெய் வித்துகளில் இயற்கையாகவே கிடைக்கும் சில நன்மைகள் அழியாமல் காக்கப்படுகின்றன.
செக்கில் தயாரித்த எண்ணெய் நுரையுடன் கூடிய மணத்துடனும், அடர் பழுப்பு நிறத்துடனும் சற்று அடர்த்தியாக இருக்கும்.

மற்ற எண்ணெய் என்றால், வெளிர் பழுப்பு நிறத்தில் கண்ணாடி போன்று அடர்த்தி குறைவாக இருக்கும்.

புனித வெள்ளி துக்க வெள்ளியா?

  புனித வெள்ளி , துக்கம் , தவம் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் ஒரு நாளாகும் . இயேசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு...