google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜூன் 2023

ஞாயிறு, 11 ஜூன், 2023

சோப் என்றால் என்ன? டிடர்ஜென்ட் என்றால் என்ன?

நீளச்சங்கிலி அமைப்பை உடைய கார்பாக்சிலிக் அமிலங்களின் (கொழுப்பு அமிலங்கள்) சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளே சோப்பு எனப்படும்.

சோப்பு தயாரிக்க கொழுப்பு காரம் ஆகிய மூலக்கூறுகள் தேவைப்படுகின்றன.

பொதுவாக சோப்பு தயாரிக்க பயன்படுபவை – சோடியம் ஹைட்ராக்சைடும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடும்.

கடின சோப்பு தயாரிக்க பயன்படுவது சோடியம் ஹைட்ராக்சைடு ஆகும்.

மென் சோப்பு தயாரிக்க பயன்படுவது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு ஆகும்.

கடின நீரில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோப்பின் சுத்தம் செய்யும் செயலை கட்டுப்படுத்துகின்றன.

சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ்படியச் செய்கிறது.

டிடர்ஜெண்ட் என்பது சல்போனிக் அமிலம் அல்லது அல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டின் உப்புகளாகும்.

சலவை செய்வதற்கு சோப்பை விட டிடர்ஜெண்ட்களே சிறந்தவை. 

பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பனோடு சல்பியூரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது டிடர்ஜெண்ட் கிடைக்கிறது.

சலவை இயந்திரங்களில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க சேர்க்கப்படுவது சோடியம் சிலிகேட்.

துணிகள் பளிச்சிடுவதற்கு  பயன்படுபவை ப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள்.

சலவையின் போது சில வகை கறைகளை நீக்க பயன்படுவது சோடியம் பெர்போரேட்.

டிடர்ஜெண்ட் துகள் கெட்டி ஆகாமல் தடுக்க பயன்படுவது சோடியம் சல்பேட்.

இரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கறைகளை நீக்க பயன்படுபவை நொதிகள்.

டிடர்ஜென்ட்டை கடின நீர்  மென்மையான நீர் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம். கடின நீரில் சோப்பை விட டிடர்ஜென்ட் சிறப்பாக செயல் புரியும்.

உப்புத்தன்மையான நீரிலும் அமிலத் தன்னமயான நீரிலும்கூட டிடர்ஜென்ட்டைப் பயன்படுத்தலாம்.

சலவை செய்யும் கலனிலோ, துணிகளிலோ, எந்த விதமான கறைகளையும், அரிப்புகளையும் டிடர்ஜெண்ட் ஏற்படுத்தாது.

குளிர்ந்த நீரில் கூட எளிதாகக் கரையும். கடின நீரிலும் எளிதாக அலசலாம்.

சோப்பைக் கொண்டு சலவை செய்ய முடியாத கம்பளி போன்ற ஆடைகளையும் டிடர்ஜென்ட் கொண்டு சலவை செய்யலாம்.

நீண்ட ஹைட்ரோ கார்பன் சங்கிலித் தொடரை கொண்டுள்ள டிடர்ஜெண்ட்கள் எளிதில் உயிரிய சிதைவிற்கு உட்படும்.

வாகனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பசை பட்டு உருவாகும் கறையைக் கூட எளிதாக டிடர்ஜென்ட்டைப் பயன்படுத்தி நீக்கி விடலாம்.

துணிகளைப் பாதுகாக்கவும், வெண்மையாகப் பளிச்சிடச் செய்யவும் டிடர்ஜென்ட் பயன்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...