google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்
ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 மே, 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்

இராமேஸ்வரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்:

ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கப்படாமலும் பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்களாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்தச் சிவலிங்கத்தைத் தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்.

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்குப் பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என்று கூறப்படுகிறது.

இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தைத் தரிசிப்பதற்குரிய
பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும்.

மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்குப் பின்புறம்
உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.

பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசயமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

ஒரு முறை சிலர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம் பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில் சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம் இல்லா
குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும் படி செய்தார் பெருமாள்.

அவள் மணப்பருவம் அடைந்த போது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனைச் சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார்.

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதியின் முன்பு, கடல் மணலில் லிங்கத்தைப் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷம் நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவ ரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்தில் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி
தோஷம் (கொலை செய்த பாவம்) வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்குச் செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம், உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தரிசித்து பயன் பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

திங்கள், 18 ஏப்ரல், 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்

*பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...*

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. 

(1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. 

(2) *செல்வம்* : இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி 
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. 

(3) *வித்யா* : 

இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.  

(4) *கர்மா* : 

தொழில், குணம், மனைவி 
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன் 
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக 
பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

(5) *மரணம்* : 

இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் 
இந்த ஜீவனுக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும் 
மருத்துவர் இதே கேள்வியை தான் 
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் 
பிழைப்பார்.  

ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப் படுகிறது. இதை மாற்ற யாராலும் முடியாது..

 *விதிவிலக்கு* 
நமக்கு காலத்தில் கிடைக்க வேண்டியது தடையாக இருக்கும் பக்ஷத்தில் ஜோதிடம் மூலமாக செய்ய வேண்டிய பரிகாரம் செய்தால் கிரஹங்களால் தடைபட்ட தோஷங்கள் விலகி செளக்யம் உண்டாகும். ஆனால் மரணத்திற்கு மட்டும் இது பொருந்தாது. 
காரணம் அது கிரஹங்களுக்கு எல்லாம் மேல் உள்ள இறைவன் வசம் உள்ளது. அந்த பொறுப்பை பாரபக்ஷம் பார்க்காத சனிபகவான் சகோதரர் தர்மராஜனிடம் இறைவன் வழங்கியுள்ளாா். 
அங்கே எந்த சலுகையும் (Recommendation) செல்லுபடியாகாது.

வாழ்க வளமுடன்



ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்

தானமும் பலன்களும்: 

1. தானம் கொடுப்பவர் மட்டுமல்ல தானம் பெறுபவரும் நல்ல ஒழுக்கத்துடன் வாழ்பவராக மனத்தூய்மை உடையவராக இருந்தால் தான் தானம் கொடுத்தவருக்கு பலன் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. எந்த வகையான தானத்திற்கு நாம் இறந்த பின்பு எதபுண்ணியத்தில் சிறந்த புண்ணியமாக கோ தானம் கருதப்படுகிறது. கோ என்றால் பசு. பசுவை ஓர் ஆலயத்திற்கு கன்றுடன் தானம் அளிப்பதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை சொர்கபுரியில் அனுபவிக்கலாம்.

2. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சிலர் கூறுவார்கள். அத்தகைய அன்னதானம் அளிப்பவர்கள் அளிக்க உதவுபவர்கள் தாம் விரும்பிய உலகத்தில் ஒரு வருட காலம் சுகம் அனுபவிக்கலாம்.

3. நிறைமாத பசுவை ஆலயத்திற்கு தானம் அளிப்பதன் மூலம் வைகுண்ட வாசத்தை கட்டாயம் அனுபவிக்கலாம்.

4. ஒருவருக்கு குடையை தானமாக அளிப்பதன் மூலம் வருண லோகத்தில் ஆயிரம் ஆண்டுகாலம் சுகம் அனுபவிக்கலாம்.

5. சந்திர லோகத்தில் சுகம் அனுபவிக்க நெய், கட்டில், மெத்தை, பாய், ஜமுக்காளம், தலையணை, தாமிரம் இதில் எதையாவது தானம் செய்ய வேண்டும்.

6. வாயு லோகத்தில் பத்தாயிரம் ஆண்டுகாலம் சுகம் அனுபவிக்க ஆலயங்களுக்கு வஸ்திர தானம் கொடுக்க வேண்டும்.

7. அக்னி லோகத்தில் சுகம் அனுபவிக்க உடல் தானம், ரத்த தானம், கண் தானம் முதலிய தானங்களை கொடுத்திருக்க வேண்டும்.

8. இந்திரலோகத்தில் இந்திரனுக்கு நிகராக அமர்ந்து சுகங்களை அனுபவிக்க வேண்டுமெனில் ஏதேனும் திருத்தலத்திற்கு யானையை தானமாக அளித்திருக்க வேண்டும்.

9. 14 இந்திரன் காலம் வரை வருண லோகத்தில் சுகங்களை அனுபவிக்க ஆலயங்களுக்கு குதிரை மற்றும் பல்லக்கு தானமாக அளித்திருக்க வேண்டும்.

10. ஒரு மன்வந்திரம் காலம் வாயு லோகத்தில் சுகங்களை அனுபவிக்க ஆலயத்திற்கு நந்தவனங்கள் கொடையாக கொடுத்திருக்க வேண்டும்.

11. மறு ஜென்மத்தில் தீர்காயுளும், அறிவாற்றலும் மிக்கவராக பிறக்க வேண்டுமெனில் ஆலயங்களுக்கு நவரத்தினங்களையும், தானியங்களையும் தானமாக கொடுத்திருக்க வேண்டும்.

12. தானம் செய்யும் போது எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மனதார தானம் செய்தவர்களின் மரணம் உன்னதமாக இருக்கும். மேலும் அவர்கள் மறு பிறவி இல்லாத பெரு நிலையை அடையலாம்.

13. சூரிய லோகத்தில் சுகங்களை அனுபவிக்க நல்ல காரியங்களை மனதார விருப்பத்துடன் ஏற்று செய்திருக்க வேண்டும்.

14. சத்திய லோகத்தில் சுகங்களை அனுபவிக்க தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

15. 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகங்களை அனுபவிக்க ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

16. குபேர லோகத்தில் ஒரு மன்வந்திரம் காலம் வரை சுகங்களை அனுபவிக்க பொன், வெள்ளி ஆபரணங்களை ஆலயங்களுக்கு தானம் கொடுத்திருக்க வேண்டும்.

17. ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் சுகங்களை அனுபவிக்க ஆலயங்களுக்கு தீபமேற்றிட எண்ணெய் வழங்கியிருக்க வேண்டும். 

18. ஜன லோகத்தில் நீண்டகாலம் சுகங்களை அனுபவித்து வாழ ஆலயங்களில் நீர் நிலைகளை உண்டாக்கி இருக்க வேண்டும் அல்லது நீர்நிலைகளை சீர்திருத்தி இருக்க வேண்டும். ஒரு குளத்தை உருவாக்கியவரை விட அதை சீர்படுத்துபவருக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

19. தபோ லோகத்தை அடைவதற்கு ஆலயத்திற்கு தேவையான, பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பாக வளர்த்திருக்க வேண்டும்.

20. 64 ஆண்டுகள் பரமபதத்தை அடைந்து சுகமாக வாழ புராண நிகழ்ச்சிகளை குறிக்கும் சிற்பங்கள் உடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றிருக்க வேண்டும்.

21. இந்திரலோகத்தில் பத்தாயிரம் ஆண்டு காலம் சுகமாக வாழ தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்தி இருக்க வேண்டும்.

22. இம்மையிலும் மறுமையிலும் ஒருவர் இன்பமடைய பவுர்ணமி தோறும் சிவபூஜைக்கு உதவியிருக்க வேண்டும். 

23. நல்ல கீர்த்தியுடன் திடகாத்திரமாக பிரகாசிக்க எள்ளை தானமாக தாமிர பாத்திரத்தில் கொடுத்திருக்க வேண்டும்.

24. கந்தர்வ லோகத்தில் இன்புற்று வாழ நல்ல கனிகளை தானம் கொடுக்க வேண்டும். ஒரு கனிக்கு ஒரு வருடம் வீதம் கணக்கு வைத்திருப்பர்.

25. கைலாச வாசம் வேண்டுமென்றால் நல்ல ஒழுக்கம் உள்ளவருக்கு ஒரு சொம்பு நிரம்ப நல்ல தண்ணீரை தானமாக அளித்திருக்க வேண்டும்.

26. 60000 ஆண்டுகள் பரமபதத்தில் சுகித்து இருக்க சூரியோதயத்தில் கங்கையில் நீராடி இருக்க வேண்டும்.

27. 14 இந்திரா ஆயுட்காலம் வரை சொர்க்கத்தில் சுகமுடன் வாழ முழு பக்தியுடன் விரதம், நோன்பு போன்றவற்றை கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

28. சத்துருக்கள் இல்லாதவராக தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தன்வந்திரி ஹோமமும், சுதர்சன ஹோமம் செய்திருக்க வேண்டும்.

29. 16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வதற்கு சோடச மகாலட்சுமி பூஜை முறையோடு அனுஷ்டிக்க வேண்டும். அதனால் அவர்களது குலமே பெருமையுடன் விளங்கும்.

30. புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவர்களும், இதை படிப்பவர்களும், கேட்பவர்களும் தனது கடைசி காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து சுகமுடன் வாழ்வார்கள். அவர்களது முன்னோர்கள் முக்தி பெற்று இன்புறுவர் என்கிறது கருட புராணம். மானிடராய் பிறந்தாலே ஏதாவது ஒரு தவறை செய்யாமல் இருக்கவே முடியாது என்ற நிலைதான் கலியுகத்தில் நிலவுகிறது. எத்தகைய உத்தமனாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் பாவம் செய்திருப்பான். நம்முடைய பாவங்கள், புண்ணியங்கள் மேலுலகத்தில் கணக்கு வைக்கப்படுகின்றன. நாம் தெரிந்தோ, தெரியாமலோ எவ்வளோ பாவங்கள் செய்திருப்போம். நம்மால் முடிந்த தான, தர்மங்களை செய்து அதன் கெடுபலன்களை குறைத்துக் கொள்வோம்.

ஜெய்ஸ்ரீராம்

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...