google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஆகஸ்ட் 2022

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

_ பாவேந்தர் பாரதிதாசன்

சனி, 20 ஆகஸ்ட், 2022

புழுவாய்ப் பிறக்கினும்

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

_தேவாரம் -நான்காம் திருமுறை- திருநாவுக்கரசர்

தலம்: திருப்பாதிரிப்புலியூர் 
பண்: திருநேரிசை 

திருப்பாதிரிப்புலியூர் என்னும் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது கடலூரின் ஒரு பகுதி.

வேறு பெயர்: திருப்பாப்புலியூர்

சுவாமியின் பெயர்கள்:
தோன்றாத்துணை யீஸ்வரர், பாடலீஸ்வரர்

தேவியாரின் பெயர்கள்:
தோகையம்பிகையம்மை, பெரியநாயகி, அருந்தவநாயகி

பொழிப்புரை :
இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப் புலியூரில் உறையும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பொன்னமராவதியில் சுயம்வரம்

பொன்னமராவதியில் விஸ்வகர்மா இலவச ஜாதக பரிவர்த்தனை விழா

அண்ணாமலை திருமண மண்டபத்தில் 07.08.2022 ஞாயிறு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை.

நடத்துபவர்கள்: 
விஸ்வகர்மா சுயம்வர சங்கமம்

திருமணத்திற்காக பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ தேடுகிறீர்களா? இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஃபேஸ்புக்கில் நான் கண்ட விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, 

தற்போது மதுரையில் இருந்து.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...