google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பொன்னமராவதி
பொன்னமராவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னமராவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜனவரி, 2023

இலவச ஜாதக பரிவர்த்தனை விழா அழைப்பிதழ்





முகநூலில் பார்த்த அழைப்பிதழில் உள்ள விபரம்:

உ

ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ

மீண்டும் சுயம்வரம்

29ம் நிகழ்வு

விஸ்வகர்மா சுயம்வர சங்கமம் 
பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம்

இலவச ஜாதக பரிவர்த்தனை விழா அழைப்பிதழ்

அன்பார்ந்த விஸ்வகர்மா இரத்த சொந்தங்களே. வணக்கம்! பொன்னமராவதியில் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படும் சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்று பலன் பெற்றோர் ஏராளம்.

(முற்றிலும் இலவசம்)

நாள்: 08.01.2023, ஞாயிற்றுக்கிழமை

(மார்கழி மாதம் 24-ம் தேதி

நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை

இடம்: அண்ணாமலை திருமண மண்டபம், பொன்னமராவதி

நிகழ்வில் கலந்துகொள்வோர் தங்கள் மணமகன் அல்லது மணமகள் ஆகியோரின்

1. ஜாதக நகல் - 2

2. போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ - 1

அவசியம் கொண்டு வரவும்.

மண்டப வாசலில் முன்பதிவு செய்யப்படும்.

மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஜாதகங்களை பதிவு செய்து கொண்டு உரிய அடையாள அட்டை எண் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நேரப்படி நிகழ்வு தொடங்கும். கால தாமதத்தைத் தவிர்க்கவும். விஸ்வமர்மா சொந்தங்களே வாருங்கள்!

உங்களுக்கான சுயம்வரத்தில் பங்குபெற்று பலன் பெறுங்கள் !!

தொடர்புக்கு:

98420 95742, 94432 79088,

99407 59731, 96269 01739

75983 61300

இவண் :

விஸ்வகர்மா சுயம்வர சங்கமம்

பொன்னமராவதி 

அவசியம் முகக்கவசம் அணிந்து வரவும்.

குறிப்பு : திருமணம் நிச்சயம் ஆனதும் எங்களுக்கு தகவல் தரவேண்டுகிறோம்.

பூவை கண்மணி பிரிண்டர்ஸ், பொன்னமராவதி. செல் : 94434 89293

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பொன்னமராவதியில் சுயம்வரம்

பொன்னமராவதியில் விஸ்வகர்மா இலவச ஜாதக பரிவர்த்தனை விழா

அண்ணாமலை திருமண மண்டபத்தில் 07.08.2022 ஞாயிறு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை.

நடத்துபவர்கள்: 
விஸ்வகர்மா சுயம்வர சங்கமம்

திருமணத்திற்காக பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ தேடுகிறீர்களா? இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஃபேஸ்புக்கில் நான் கண்ட விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, 

தற்போது மதுரையில் இருந்து.

சனி, 26 ஜூன், 2021

தடுப்பூசி

பொன்னமராவதி புதுப்பட்டியில் வாழ்வது சுகமானது.

சுக+ஆதாரம் = சுகாதாரம் என்று நினைக்கிறேன். இதற்குத் தமிழில் உடல் நலம் என்பர்.

நல்லொழுக்கம், பண்பாடு, பக்தி, அன்பு, கருணை, உதவி, விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்குவது பொன்னமராவதி தாலுகா புதுப்பட்டியும் ஆகும்.

அரசு அலுவலர் ஆகட்டும், கடைக்காரர் ஆகட்டும், ஊழியர் ஆகட்டும், ஏழை ஆகட்டும், பணக்காரன் ஆகட்டும், எவரேனுமாக இருக்கட்டும். சத்தியத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஏமாற்ற மாட்டார்கள். பிறரது துன்பத்தை உணர்வார்கள். 

26.6.2021 அன்று இதை நான் முற்றிலும் உணர்ந்தேன்.  நான் பிறக்கக் காரணமான என் அப்பா உயர்திரு, மேன்மைமிகு, அறிவுமிகு, ஆற்றல்மிகு, சிந்தனைமிகு, சிறப்புமிகு, உண்மைமிகு, உயர்வுமிகு, பாசமிகு, நேசமிகு, பகுத்தறிவுமிகு, மாண்புமிகு, கடமைமிகு, கண்ணியம்மிகு, கட்டுப்பாடுமிகு, பொறுமைமிகு, பேராற்றல்மிகு, சகிப்புத்தன்மைமிகு, செய்யும் தொழிலே தெய்வம் எனும் தகர வேலை மு. நடராஜன் ஆச்சாரி வயது 93 அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. பிடாரி ஆத்தா கோயிலின் அருகில் வர்த்தகர் சங்கத்தாரின் கல்யாண மண்டபம் உள்ளது. அங்கே முகாம் அமைத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தார்கள். என் அப்பா வாழும் வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவு.

என்னைப் பெற்ற அப்பா ஒரு மாற்றுத் திறனாளி. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் இடுப்பின் பந்துக்கிண்ண மூட்டு ஒடிந்ததால் திறமைமிகு டாக்டர்களால் அறுக்கப்பட்டு எவர்சில்வர் எலும்பு பொருத்தப்பட்டு கர்வ நடை நடக்க மறுக்கப்பட்டு எல்லாம் வல்ல முருகன் அருளால் நற்கதி அடையக் காத்திருப்பவர் அவர்.

முகாமுக்குச் சென்றேன். மாற்றுத் திறனாளியான சூப்பர் சீனியர் சிட்டிசன் ஆன அப்பாவுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

என் வேண்டுகோளைச் செவிமடுத்த தலைமை டாக்டர் கெட்டிக்கார மகா உத்தமர் என்றே நினைக்கின்றேன். நேரம், கூட்டம், வேலைப்பளு, முதலியவற்றைக் கணக்கிட்டு தாமதிக்காமல் என் அப்பாவுக்கு அவர் படுத்திருக்கும் படுக்கைக்கே சென்று தடுப்பூசி போடுமாறு ஆணையிட்டார். 

அங்ஙனமே போடப்பட்டது. 

வாழ்வில் நான் அடைந்த பெருமகிழ்வு இதுவே ஆகும்.

இதை என் தம்பி சென்னையில் வாழும் ஸ்கைலாப் பழநியப்பனிடம் ஃபோனில் சொன்னபோது அவன் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் அதைப் பெற உங்கள்  ஃபோனில் இடம் இல்லாமல் போகும்.

பணிவன்புடன்
ஆறுமுகம் நடராஜன்.

சனி, 19 ஜூன், 2021

பொன்னமராவதியின் உழைப்பாளிகள்

பள்ளத்தில் மண்ணைக் கொட்டி நிரப்பும் வேலையில் பொன்னமராவதி புதுப்பட்டி இளைஞர்கள். 

இடம்: பிடாரி கோயில் வடக்கு வீதி.

உழைப்பே உயர்வு!


















சனி, 29 மே, 2021

புதுப்பட்டி சேங்கை

பாசி படிந்து பச்சை நிறமாய்க் காணப்படும் குளம் சேங்கை எனப்படும். 

பொன்னமராவதி புதுப்பட்டியிலும் ஒரு சேங்கை உண்டு. சதுர வடிவில் இருக்கும் இது பலர் குளிக்கப் பயன்படுகிறது. ஒரு காலத்தில் இது வட்டமாக இருந்த குடிநீர் ஊருணி ஆகும். காலப்போக்கில் குளிப்பதற்கு என்று ஆகி விட்டது.

புதுப்பட்டி சபாபதி நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் தர்மகார்யமாய் வெட்டப்பட்டது. மூக்கன் செட்டியாரின் மகன் பழநியப்பச் செட்டியாரின் பெயர் கொண்டதே பழநியப்பா பார்க். சங்கும் உண்டு.

நீ ர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு. மழை காலத்தில் வடக்கே புதுவளவில் இருந்து வரும் உபரி நீர் ஒரு சிறிய நீர்த்தேக்கத்தில் நிரம்பி பின் சேங்கையை நிரப்பும். நீர் விழும் தூம்பு இரண்டு உண்டு. சேங்கை நிரம்பினால் தெற்கே ஒரு குழாயின் வாயிலாக ஆறுகால் மண்டபத்தின் அருகே கடத்தப்பட்டு வடிகால் பாதையில் சேர்ந்து பின்பு அமரகண்டானை அடையும்.

 ஊருணியில் இரண்டு மட்டங்களில் ஆளோடி உண்டு. நடுவில் பெரும் பள்ளம் உண்டு. சுற்றிலும் கம்பித் தடுப்பு உண்டு. குளிப்பவர்கள் வசதிக்கு என்று அருகில் உள்ள கடைகளில் ஐந்து பைசாவுக்கும் பத்துப் பைசாவுக்கும் லூஸில் எண்ணெய், சிகைக்காய் பவுடர், டாடா ஹேர் ஆயில், சோப்பு, நீலச் சோப்பு, விற்பார்கள். சிறுவர்கள் ஆட்டம் போட்டுக் குளிப்பார்கள். நீரில் டைவ் அடிப்பார்கள். வலை போட்டும், தூண்டில் இட்டும் மீன் பிடிப்பார்கள். தண்ணீர் உப்புத்தன்மையற்றது. ஆகவே கட்டடம் கட்ட தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வார்கள். பிடாரி கோயில் திருவிழாவில் சாமி குளத்தில் இறங்கிக் குளிக்கும்.

குளத்தின் தெற்கேயுள்ள ஆறுகால் மண்டபத்தின் தென்புறத்தில் உள்ள தார்ச் சாலையின் தென்புறத்தில் ஆண்களுக்கான இலவச சிறுநீர்க் கழிப்பிடமும், குளத்தின் வடக்கே பாறையின் அருகில் தண்ணீர் வசதியுடன் பெண்களுக்கான இலவசக் கழிப்பறையும் இருந்தன. இப்போது இல்லை.

அக்காலத்தில் குழாயில் காவிரித் தண்ணீர் வரத்து இல்லை. மே
லும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக வையாபுரி, செம்பொட்டல், ஈஸ்வரமூர்த்தி, வேகுப்பட்டி, மணப்பட்டி, அம்மன் சேங்கை, பூலாங்குறிச்சி என்று அலைவோம். அலைய முடியாதவர்களுக்கு காண்டாக்காரர் குடத்துக்கு 10 காசு என்று விற்பார். 

ஊருணியாய் இருந்த புதுப்பட்டி சேங்கை மாசுபட்டு குளம் ஆனதைப் போல பல குடிநீர் ஊருணிகளும் கெட்டுவிட்டன.

காட்டில் பல விலங்குகள் இருந்தாலும் காடு கெடுவதில்லை. நாட்டில் மனிதர்களின் முறையற்ற சமூகப் பழக்கங்களால் சூழல் கெடுகிறது.

பிற பின்பு. 
வணக்கம். 
அன்புடன் 
ஆறுமுகம் நடராஜன்

பிடாரி அம்மன் துணை

சனி, 15 மே, 2021

பொன்னமராவதி

நான் படித்துக்கொண்டிருந்தபோது பொன்னமராவதி புதுப்பட்டியில் பேட்டையார் மண்டகப்படி என்று ஒரு திருவிழா விடியவிடிய நடக்கும். பெரிய பெரிய வித்வான்களின் இசைக் கச்சேரி, நாடகம், பாட்டுக்
 கச்சேரி, கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், த.பி. சொக்கலால் ராம் சேட் பீடிக்காரனின் 16 மிமீ திரைப்படம், நிஜாம் லேடி புகையிலைக்காரனின் 16 மிமீ திரைப்படம், தண்ணீர்ப் பந்தல், பானகம், நீர்மோர், பலூன், ஊதல், சவ்வு மிட்டாய், என்று ஒரே கொண்டாட்டம். பொன்னமராவதி பட்ட மரத்தான் திருவிழா, வலையபட்டி மலையாண்டி திருவிழா, கொன்னையூர் முத்துமாரி திருவிழா, குன்னக்குடி வயலின் வலையபட்டி தவில் என்று அமர்க்களப்படும். தினமும் மூன்று ஷோ சினிமா. லீவு நாட்களில் 4 ஷோ. ரெண்டு சினிமாக்கள். 40 பைசாவிலிருந்து ஒன்னேகால் ரூபாய் வரை டிக்கெட். 24 மணி நேரமும் எங்கு சுற்றினாலும் உணவு, டீ, காபி, உண்டு. புதுப்பட்டி டீ கடைகளில் கதவுகள் இல்லை. அரசியல் மேடைகள் மாலையில் முழங்க ஆரம்பித்தால் அதிகாலை 3 மணிவரை நடக்கும். தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், போலீஸ் கண்ணன், சிதம்பரம் வீரக்கனல் ஜெயவேல் என்று பேச்சாளர்கள் சும்மா விளாசித் தள்ளுவார்கள். எம்ஜிஆர் வருகிறார், வந்து கொண்டிருக்கிறார், இதோ வந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பண்டிகைக் கால இரவுகளில் துணிமணிகளை காண்டா விளக்கு வெளிச்சத்தில் ஏலம் விடுவார்கள். நேபாளத்து ஸ்வெட்டரும், லண்டன் எவர்சில்வரும், மலிவாகக் கிடைக்கும். ரேடியோ மைதானத்தில் பாவைக்கூத்து நடக்கும். சைக்கிள் சந்திரன் ராப்பகலாக தரையில் கால் ஊன்றாமல் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்வார். மேல்நிலை நீர்த்தேக்க பில்டிங்கில் லைப்ரரி செயல்படும். ஷோ கொட்டகையில் சூதாட்டம் நடக்கும். சின்னமனூர் ஃபேமஸ் சர்க்கஸ் நடக்கும். வெளியூர் வியாபாரிகள் அண்டர்வேர் நிரம்பப் பணத்துடன் செகண்ட் ஷோ படத்தை ராத்திரி பார்த்து விட்டு அதிகாலை பஸ் பிடித்துப் போவார்கள். பொன்னமராவதி to மெட்ராஸ் பஸ் கட்டணம் 20 ரூபாய். இராமாயண மடத்தருகில் உள்ள க்ளப்பில் சீட்டாட்டம் நடக்கும். மணி வண்டியில் பக்கோடா மிக்சர் காராச்சேவு முருக்கு அதிரசம் 10 பைசா. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணபவனில் ரெங்கையர் போடும் 50 பைசா காபியை காலையில் 5 மணிக்கு பித்தளை வட்டாக்கப்பில் குடித்தால் 8 மணி வரைக்கும் பசிக்காது. பிற பின்பு அன்புடன் ஆறுமுகம் நடராஜன்.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...