google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அரம்பை
அரம்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரம்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 மார்ச், 2018

சீதையின் நடை அழகு


பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.


பொருள்:
பொன்னின்    ஒளியையும்.    பூவின் மணத்தையும்.   சந்தனத்துக் குளிர்ச்சியையும், மின்னலின்  அழகையும் ஒப்புச் சொல்லுமாறு தன்   நடைக்குத்  தோற்று   அன்னப்  பறவையும், தன் அழகுக்குத்  தோற்று  தெய்வ  உலகப் பெண்டிரும், தன் இனிமைக்குத் தோற்று அரிய தேவ அமுதமும் வெட்கமுறுமாறு அரசவையில் அமைந்திருந்த மணி மண்டபத்தை அடைந்தாள் சீதை. 

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...