google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நாலடியார்
நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

நாலடியார் 354

கயமை

கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
     சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
     புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
     மதித்திறப்பர் மற்றை யவர்.

பொருள்: 
பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலையுடைய நற்குலப் பெ ண்கள், விலைமகளிரைப் போல தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர்.

விளக்கம்: 
குலப்பெண்கள் மற்றவர் வியக்கும்படி தம்மை அழகுபடுத்திக்கொண்டு பிறர் பொருளைப் பறிப்பதில்லை, வேசிகளே அப்படிச் செய்வார்கள்; அதைப் போல நல்லவர்கள் தம்மைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடங்கியிருப்பார்கள். கயவர்களோ  தம்மை மேம்படுத்தி நடித்துக் காட்டி வஞ்சித்துப் பொருள் பறித்துக் கொண்டு போவார்கள்.

கயவர்கள், வேசியர்களைப் போல வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து.

வியாழன், 27 டிசம்பர், 2018

நாலடியார் பொருட்பால் கல்வி


கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

பொருள்: 
நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.

என் ஐயம்: 
அன்னப்பறவை எவ்வாறு நீரை விடுத்துப் பாலை மட்டும் அருந்தும்? எந்த மாதிரியான நுட்பத்தை அது பெற்றுள்ளது? நீர் இருக்க பால் எங்ஙனம் உள்ளிழுக்கப்படும்? எவ்வாறான வடிகட்டியை அது பெற்றிருக்கிறது? தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...