google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நாலடியார் பொருட்பால் கல்வி

வியாழன், 27 டிசம்பர், 2018

நாலடியார் பொருட்பால் கல்வி


கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

பொருள்
நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.

என் ஐயம்: 
அன்னப்பறவை எவ்வாறு நீரை விடுத்துப் பாலை மட்டும் அருந்தும்? எந்த மாதிரியான நுட்பத்தை அது பெற்றுள்ளது? நீர் இருக்க பால் எங்ஙனம் உள்ளிழுக்கப்படும்? எவ்வாறான வடிகட்டியை அது பெற்றிருக்கிறது? தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?