google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மார்ச் 2022

வியாழன், 31 மார்ச், 2022

TNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கானஅறிவிப்பை  வெளியிட்டுள்ளது. 

மார்ச் 30 இலிருந்து ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.

குரூப் 4 காலிப்பணியிடங்கள் மொத்தம் 7,382.

எல்லாப் பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும். இதில் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். 

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 

அக்டோபர் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்.


இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் 55 இடங்கள் உள்ளன. இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். என்.சி.சி., பிரிவில் குறைந்தது இரண்டாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் 19 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 13.4.2022 மாலை 3:00 மணி

விபரங்களுக்கு: https://joinindianarmy.nic.in

நன்றி தினமலர் 22/03/2022

செவ்வாய், 29 மார்ச், 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

*தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோம்....*

*தேங்காய் சகுனம்:*

1) தேங்காய் முடிபாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால், செல்வம் சேரும்.

2) சரிசமமாக உடைந்தால், துன்பம் தீரும், செல்வம் பெருகும்.

3) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால், ரத்தினம் சேரும்.

4) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால், அழியாத செல்வம் உண்டாகும்.

5) சிறு சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு, ஆபரண லாபம் உண்டாகும்.

6) ஓடு தனியாக கழன்றால், துன்பம் வரும்.

7) நீளவாக்கில் உடைந்தால், தனம் அழிந்து துன்பம் உண்டாகும்.

8) உடைக்கும் பொழுது கைபிடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.

9) முடி பாகம் இருகூறானால் தீயினால் பொருள் சேதமாகும்.

10) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால், வேண்டும் காரியம் உடனே வெற்றியைத் தரும்.

நன்றி.


சனி, 19 மார்ச், 2022

தமிழ்ப்படுத்துக!

 தமிழ் படும் பாடு:

"அதிகாரிகளின் அஜாக்கிரதையால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்" என்று தினமலர் நாளிதழின் மதுரை பதிப்பு 19/02/2021 ஆம் தேதிய செய்தியை நேற்றிரவு அதாவது 18 மார்ச் 2022 அன்று உணவுப் பொட்டலத்தைப் பிரித்து உணவை உண்டபின் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. 

இந்த நான்கு சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இல்லையா?

"அலுவலர்களின் கவனமின்மையால் மிகுந்துள்ள ஊடுருவல்கள்" என்று சொல்லலாமா?

இச்செய்தியை, ஆங்கில நாளேடு எவ்வாறு வெளியிடும்? 

"Increased encroachment due to the carelessness of officers." என்றா? 
அல்லது 
"Carelessness of Government Officials leads to Increased Encroachments" என்றா?

இருக்காது... 

ஜர்னலிசத்தின்படி எழுதுவார்கள்.


பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி
இப்போது மதுரையில் இருந்து.

புதன், 9 மார்ச், 2022

எப்படிச் சாப்பிட வேண்டும்?

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

மு.வ. உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று, அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றும் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

கலைஞர் உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்

மு.வ. உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றிய பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

குறள் 943:

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

மு.வ. உரை:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

கலைஞர் உரை:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

குறள் 944:

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

மு.வ. உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

கலைஞர் உரை:
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.

குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

மு.வ. உரை:
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

கலைஞர் உரை:
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.

குறள் 946:
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

மு.வ. உரை:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதாய் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

கலைஞர் உரை:
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.


குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

மு.வ. உரை:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

கலைஞர் உரை:
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

மு.வ. உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

கலைஞர் உரை:
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
மு.வ. உரை:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

கலைஞர் உரை:
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து

மு.வ. உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.


ThirukkuraL Chapter 95 Medicine

Excess or deficiency [in food and work] will result in disease 
due to imbalance in wind, bile and phlegm.                                                  [941]

There is no need of medicine for the body; if one eats, 
after making sure that  what was eaten has been fully digested.            [942]

Past food digested, eat in proper measure; 
this is the way to a long life in the human body.                                            [943]


Assured of digestion, and hunger as fire,
eat with care, food which is not disagreeable.                            (944)

If food which is not disagreeable, is taken with self denial,
no harm will come to life because of diseases.                                         [945]

As health and happiness are to a moderate eater,
so disease sticks to a glutton.                                                                          (946)

Indiscriminate eating, far beyond one's digestive powers,
will cause limitless ills.                                                                                      [947]

Diagnose the disease; discover the cause;
seek the proper remedy and apply it with skill.                                             [948]

A doctor should treat, properly taking account of
the patient's nature, the disease state and the season.                               [949]

The patient, the doctor, the remedy and the attendant;
Medicine comprises these limbs with four attributes to each.                       [950]


தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...