google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 மார்ச், 2023

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே | Ammaiye appa oppilla maniye


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே


பொழிப்புரை:
தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து காலத்தை வீணாகக் கழிக்கின்ற புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, மிக மேன்மையான சிவபதத்தைக் கொடுத்தருளின அருட்செல்வமே! சிவபிரானே! இவ்வுலகிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன், நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...