அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
பொழிப்புரை:
தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து காலத்தை வீணாகக் கழிக்கின்ற புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, மிக மேன்மையான சிவபதத்தைக் கொடுத்தருளின அருட்செல்வமே! சிவபிரானே! இவ்வுலகிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன், நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.