google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மிகவும் அரிதான சிற்பம்

ஞாயிறு, 19 மார்ச், 2023

மிகவும் அரிதான சிற்பம்

அபூர்வமான சிலை வடிவம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் அமைந்திருக்கும் வித்தியாசமான திருக்கோலம் இது.

மும்மூர்த்திகளும், ஒரே சிலையில் காட்சியளிப்பது அபூர்வமான விஷயமாகும். அதிலும் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார், மகாவிஷ்ணு. பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கிறார்


விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சியளிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...