கோயில்
– திருவிருத்தம்
குனித்த புருவமும், கொவ்வைச்
செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்
போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும்
காணப் பெற்றால்
மனி(த்)தப்
பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
--- திருநாவுக்கரசு சுவாமிகள்
பொருள்:
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி
போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும்
புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம்
போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த
பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப்
பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும்
காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.
திருச்சிற்றம்பலம்
very useful information thankyou
பதிலளிநீக்குthiruvasagam and thevaram
அருமையான தகவல்.
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குIndha paadal endha kovilil padapetradhu iyya?
பதிலளிநீக்குAs per my knowledge it's in chithambaram
நீக்குஇத் தேவாரத்தில் பண் என்ன?
பதிலளிநீக்குபனித்த சடை என்பது சாம்பல் படிந்த சடை சுடுகாடுடைய சுடலை பொடி பூசிய என்பது போல்
பதிலளிநீக்கு