இறந்த இராவணனின்
உடலைப் பார்த்த மண்டோதரியின் புலம்பல்
"வெள்
எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி
மேலும் கீழும்
எள்
இருக்கும் இடமின்றி, உயிர் இருக்கும் இடன்
நாடி, இழைத்தவாறோ?
கள்
இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச் சிறையில்
கரந்த காதல்
உள்
இருக்கும் எனக் கருதி, உடல்
புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?
வெள்ளெருக்கம்பூ
மாலையை அணிந்த சிவபெருமானுடைய கயிலைமலையைப்
பெயர்த்தெடுத்த உனது அழகிய உடம்பின்
மேலும் கீழுமாக எள் இருப்பதற்குரிய
சிறிய இடம்கூட இல்லாதபடி, உன்
உயிர் இருக்கும் இடத்தைத் தேடித் துளைத்ததோ அன்றி,
தேன் இருக்கும் மலரணிந்த சானகி மீதான காதலை
உன் மனச் சிறையில் எங்காவது
மறைத்து வைத்திருக்கிறாயோ என்று கருதி உன்
உடல் முழுவதும் புகுந்து துளைத்ததோ இராமனுடைய வாளி? என்று இராவணன்
உடல் மீது விழுந்து மண்டோதரி
கதறுகிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.