google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கந்தர் அலங்காரம்

சனி, 24 மார்ச், 2018

கந்தர் அலங்காரம்


திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் பாடல் 38

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

சொற்பிரிவு

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

பதவுரை

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?