google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பொருட்பால்
பொருட்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருட்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 செப்டம்பர், 2021

அறிவுடைமை

திருக்குறள் 426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது தறிவு.

மு.வரதராசனார் உரை:
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

மு. கருணாநிதி உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

பரிமேலழகர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம். உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.

மணக்குடவர் உரை:
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

புலியூர்க் கேசிகன் உரை:  
எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை.

Transliteration:

yevva thuraivathu ulakam ulakaththodu
avva thuraiva tharivu

Shuddhananda Bharati:

The Possession of Knowledge:

As moves the world so move the wise in tune with changing times and ways.

GU Pope:

The Possession of Knowledge:

As dwells the world, so with the world to dwell in harmony- this is to wisely live and well.

To live as the world lives, is wisdom.


வியாழன், 1 ஜூலை, 2021

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

குறள் விளக்கம்:

ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர் மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின் வாங்கும் தன்மையது (௪௱௮௰௬)
_புலியூர்க் கேசிகன்


ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது. (௪௱௮௰௬)
—மு. வரதராசன்

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும். (௪௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும் (௪௱௮௰௬)
—மு. கருணாநிதி

பரிமேலழகர் உரை
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.

நாமக்கல் கவிஞர்:
ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.

பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.

காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.

வ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.

தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping back in order to charge its opponent.

Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy.

செவ்வாய், 22 ஜூன், 2021

திருக்குறள் 965

பால்: பொருட்பால் 

அதிகாரம்: மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.   

(௯௱௬௰௫ – 965)

விளக்கம்

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்  (௯௱௬௰௫)

—   புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

 

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.  (௯௱௬௰௫)

—   மு. வரதராசன்

 

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.  (௯௱௬௰௫)

—   சாலமன் பாப்பையா


குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்  (௯௱௬௰௫)

—   மு. கருணாநிதி


 மணக்குடவர் உரை:

மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின்.

இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.


பரிமேலழகர் உரை:

குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)


இரா இளங்குமரன் உரை:

 மலை போன்ற உயர்ந்தவரும், மானத்தில் இழிந்த செயல்களை ஒரு குன்றிமணி அளவாகச் செய்வாராயினும், இழிந்தவராகி விடுவர்.

ஆங்கிலம் (English)

Kundrin Anaiyaarum Kundruvar Kundruva

Kundri Anaiya Seyin

—   (Transliteration)

 

Kuṉṟiṉ aṉaiyārum kuṉṟuvar kuṉṟuva

Kuṉṟi aṉaiya ceyiṉ.

—   (Transliteration)

 

Even a hill-like eminence can be brought low By deeds as small as a speck.

 

ஹிந்தி (हिन्दी)

अल्प घुंघची मात्र भी, करते जो दुष्काम ।

गिरि सम ऊँचे क्यों न हों, होते हैं बदनाम ॥ (९६५)

 

தெலுங்கு (తెలుగు)

ఏనుగంటివాడు యెలుకయైపోవును

చెయరాని పనులఁ జేపెనేని. (౯౬౫)

 

மலையாளம் (മലയാളം)

പർവ്വതം പോലുയരത്തിൽ മഹത്വമുണ്ടെന്നാകിലും കുന്നിയോളം പിഴച്ചെന്നാൽ പതനം സംഭവിച്ചിടും (൯൱൬൰൫)

 

கன்னடம் (ಕನ್ನಡ)

ಬೆಟ್ಟದಂತೆ ಎತ್ತರವಾಗಿ ನಿಂತ ನೆಲೆಯಲ್ಲಿ ಉಳ್ಳವರೂ ಗುಲುಗುಂಜಿಯಷ್ಟು ಅಲ್ಪ ಕಾರ್ಯವನ್ನು ಮಾಡೀದರೆ ಕೀಳಾಗಿ ಬಿಡುವರು. (೯೬೫)

 

சமஸ்கிருதம் (संस्कृतम्)

महीधरसमा: सन्त: स्वल्पं गुञ्जाफलोपमम् ।

पतनोन्मुखकार्यं च कुर्वन्तस्ते पतन्त्य्ध: ॥ (९६५)

 

சிங்களம் (සිංහල)

ගරුව අඩුකරවන - සුළු දෙයක් මුත් කළහොත් හෙල මෙන් උස් වුවත් - උස් තැනින් පහතට වැටෙත් මැයි (𑇩𑇳𑇯𑇥)

 

சீனம் (汉语)

人雖名重如山, 行爲偶一不檢, 卽可聲名掃地. (九百六十五)

—   程曦 (古臘箴言)

 

மலாய் (Melayu)

Biar pun orang yang sa-gagah gunong akan kelihatan kechil sa-kira- nya ia melakukan kerja keji, walau pun perbuatan-nya itu sa-kechil biji kunri.

—   Ismail Hussein (Tirukkural)

 

கொரிய (한국어)

훌륭한자가최소한의실수를범하면흔적도없이사라지리라. (九百六十五)

 

உருசிய (Русский)

Даже великие люди будут казаться ничтожными, если совершат низкие деяния, пусть и крохотные, как орешек

 

அரபு (العَرَبِيَّة)

إن الذين حصلوا العزو والشرف لهم لجبل شامخ لا يرتكبون أعمالا غير شريفة وبو كانت مثل حبة كنرى (٩٦٥)

 

 

பிரெஞ்சு (Français)

Ceux qui sont grands (déparia noblesse de leur famille) comme une montagne, se ravalent, lorsqu’ils font un acte vil aussi petit qu’un grain de pois d’Amérique.

 

ஜெர்மன் (Deutsch)

Selbst solche, die wie ein Hügel sind, fallen zu Boden, wenn sie bodenlose Dinge tun – seien sie auch nur so groß wie eine wilde Lakritze.

 

சுவீடிய (Svenska)

Även män vilkas storhet är såsom höga berg blir små när de gör något ont, om än smått som ett Kunri-frö.

—   Yngve Frykholm (Tirukkural)

 

இலத்தீன் (Latīna)

Quamvis montibus sint similes, humilcs fiunt, qui humile’ quid faciant, ctiamsi semini cunri sit simile. (CMLXV)

 

போலிய (Polski)

Nawet czyn tak nieznaczny jak ziarnko jęczmienia Może strącić cię poza krawędzie…

—   Bohdan Gębarski (Tirukkural – Święta księga południowych Indii)


வியாழன், 27 டிசம்பர், 2018

நாலடியார் பொருட்பால் கல்வி


கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

பொருள்: 
நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.

என் ஐயம்: 
அன்னப்பறவை எவ்வாறு நீரை விடுத்துப் பாலை மட்டும் அருந்தும்? எந்த மாதிரியான நுட்பத்தை அது பெற்றுள்ளது? நீர் இருக்க பால் எங்ஙனம் உள்ளிழுக்கப்படும்? எவ்வாறான வடிகட்டியை அது பெற்றிருக்கிறது? தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...