பொன்னின்
ஒளி, பூவின் வெறி, சாந்து
பொதி சீதம்,
மின்னின்
எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும்,
அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன்
அவை இருந்த மணி மண்டபம்
அடைந்தாள்.
பொருள்:
பொன்னின் ஒளியையும். பூவின்
மணத்தையும். சந்தனத்துக்
குளிர்ச்சியையும், மின்னலின் அழகையும்
ஒப்புச் சொல்லுமாறு தன் நடைக்குத் தோற்று அன்னப் பறவையும்,
தன் அழகுக்குத் தோற்று தெய்வ உலகப்
பெண்டிரும், தன் இனிமைக்குத் தோற்று அரிய
தேவ அமுதமும் வெட்கமுறுமாறு அரசவையில் அமைந்திருந்த மணி மண்டபத்தை அடைந்தாள் சீதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.