பஞ்சி ஒளிர், விஞ்சு
குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம்
நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள
மஞ்ஞை என, அன்னம் என,
மின்னும்
வஞ்சி என, நஞ்சம்
என, வஞ்ச மகள் வந்தாள்.
பொருள்:
இராமனும், இலக்குவனும்,
சீதையும் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது சூர்ப்பணகை (சூர்ப்பனகை, சூர்ப்பநகை) வந்தாள்;
உள்ளத்திலே வஞ்சக எண்ணம் கொண்டு அழகியதோர் வடிவம் எடுத்து வந்தாள்; விஷம் என்று சொல்லும்படி வந்தாள்; அன்னம்போல நடந்து வந்தாள்; செம்பஞ்சும் குளிர் தளிர்களும் வருந்த செக்கச்
செவேல் என்ற சிவந்த தாமரை போன்ற தனது சிறிய அடிகளை எடுத்து மெல்ல மெல்ல வைத்து இளமயில்
போல வந்தாள்.
அரக்கி வடிவத்தோடு சென்றால் இராமன் தன்னைப் பார்க்க மாட்டான் என்று ஒரு அழகிய பெண் வடிவில் சூர்ப்பணகையானவள் இராமனை அணுகுகிறாள்.
அரக்கி வடிவத்தோடு சென்றால் இராமன் தன்னைப் பார்க்க மாட்டான் என்று ஒரு அழகிய பெண் வடிவில் சூர்ப்பணகையானவள் இராமனை அணுகுகிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.