கயமை
கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
பொருள்:
பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலையுடைய நற்குலப் பெ ண்கள், விலைமகளிரைப் போல தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர்.
குலப்பெண்கள் மற்றவர் வியக்கும்படி தம்மை அழகுபடுத்திக்கொண்டு பிறர் பொருளைப் பறிப்பதில்லை, வேசிகளே அப்படிச் செய்வார்கள்; அதைப் போல நல்லவர்கள் தம்மைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடங்கியிருப்பார்கள். கயவர்களோ தம்மை மேம்படுத்தி நடித்துக் காட்டி வஞ்சித்துப் பொருள் பறித்துக் கொண்டு போவார்கள்.
கயவர்கள், வேசியர்களைப் போல வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.