சுக+ஆதாரம் = சுகாதாரம் என்று நினைக்கிறேன். இதற்குத் தமிழில் உடல் நலம் என்பர்.
நல்லொழுக்கம், பண்பாடு, பக்தி, அன்பு, கருணை, உதவி, விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்குவது பொன்னமராவதி தாலுகா புதுப்பட்டியும் ஆகும்.
அரசு அலுவலர் ஆகட்டும், கடைக்காரர் ஆகட்டும், ஊழியர் ஆகட்டும், ஏழை ஆகட்டும், பணக்காரன் ஆகட்டும், எவரேனுமாக இருக்கட்டும். சத்தியத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஏமாற்ற மாட்டார்கள். பிறரது துன்பத்தை உணர்வார்கள்.
26.6.2021 அன்று இதை நான் முற்றிலும் உணர்ந்தேன். நான் பிறக்கக் காரணமான என் அப்பா உயர்திரு, மேன்மைமிகு, அறிவுமிகு, ஆற்றல்மிகு, சிந்தனைமிகு, சிறப்புமிகு, உண்மைமிகு, உயர்வுமிகு, பாசமிகு, நேசமிகு, பகுத்தறிவுமிகு, மாண்புமிகு, கடமைமிகு, கண்ணியம்மிகு, கட்டுப்பாடுமிகு, பொறுமைமிகு, பேராற்றல்மிகு, சகிப்புத்தன்மைமிகு, செய்யும் தொழிலே தெய்வம் எனும் தகர வேலை மு. நடராஜன் ஆச்சாரி வயது 93 அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. பிடாரி ஆத்தா கோயிலின் அருகில் வர்த்தகர் சங்கத்தாரின் கல்யாண மண்டபம் உள்ளது. அங்கே முகாம் அமைத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தார்கள். என் அப்பா வாழும் வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவு.
என்னைப் பெற்ற அப்பா ஒரு மாற்றுத் திறனாளி. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் இடுப்பின் பந்துக்கிண்ண மூட்டு ஒடிந்ததால் திறமைமிகு டாக்டர்களால் அறுக்கப்பட்டு எவர்சில்வர் எலும்பு பொருத்தப்பட்டு கர்வ நடை நடக்க மறுக்கப்பட்டு எல்லாம் வல்ல முருகன் அருளால் நற்கதி அடையக் காத்திருப்பவர் அவர்.
முகாமுக்குச் சென்றேன். மாற்றுத் திறனாளியான சூப்பர் சீனியர் சிட்டிசன் ஆன அப்பாவுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
என் வேண்டுகோளைச் செவிமடுத்த தலைமை டாக்டர் கெட்டிக்கார மகா உத்தமர் என்றே நினைக்கின்றேன். நேரம், கூட்டம், வேலைப்பளு, முதலியவற்றைக் கணக்கிட்டு தாமதிக்காமல் என் அப்பாவுக்கு அவர் படுத்திருக்கும் படுக்கைக்கே சென்று தடுப்பூசி போடுமாறு ஆணையிட்டார்.
அங்ஙனமே போடப்பட்டது.
வாழ்வில் நான் அடைந்த பெருமகிழ்வு இதுவே ஆகும்.
இதை என் தம்பி சென்னையில் வாழும் ஸ்கைலாப் பழநியப்பனிடம் ஃபோனில் சொன்னபோது அவன் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் அதைப் பெற உங்கள் ஃபோனில் இடம் இல்லாமல் போகும்.
பணிவன்புடன்
ஆறுமுகம் நடராஜன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.