நல்ல நேரம் பார்க்கும் போது கவனிக்கத்தக்கவை:
ஒரு நல்ல செயலைச் செய்யத் தொடங்கும்முன் நல்ல நேரம் பார்த்துச் செய்வது வழக்கத்தில் உள்ளது. ஆகவே ஒரு செயலைத் தொடங்குவதற்கு நல்ல நேரம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை யாவை என்று பார்ப்போம்.
நல்ல நேரம் பார்க்கும்போது அன்று கரிநாளாக இருக்கக் கூடாது.
அஷ்டமி நவமி திதிகளை தவிர்க்க வேண்டும்.
யோகம் மரண யோக வேளையாக இல்லாமல் சித்த அமிர்த யோகமாக இருக்க வேண்டும்.
ஓரைகளில் சூரியன் செவ்வாய் சனி ஓரை இல்லாமல் பிற சுப ஓரைகள் இருந்தால் நல்லது.
பஞ்சகங்களில் பொதுவாக அக்னி சோர ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அக்னி சோர ரோக பஞ்சகங்களில் திருமணம் சீமந்தம் புதுமனை புகுதல் போன்ற காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதைப் போல தொழில் லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்களை மிருத்யு பஞ்சகத்தில் தொடங்கக் கூடாது.
பஞ்சு பெட்ரோல் பொருட்கள் நூல் துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றை அக்னி பஞ்சகத்தில் தொடங்கக் கூடாது.
அரசு மற்றும் பொது நிறுவனங்கள் கடன் வாங்கி நடத்தும் தொழில்களை ராஜ பஞ்சகத்தில் ஆரம்பிக்கக் கூடாது.
நிஷ் பஞ்சகத்தில் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். நல்ல நேரம் பார்க்கும்போது அவருடைய நட்சத்திரத்திற்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.
இராகுகாலம் எமகண்டம் இருக்கக்கூடாது.
கௌரி பஞ்சாங்கத்தில் ரோக சோர விஷம் என்று இருக்கக் கூடாது.
சுப காரியங்களுக்குச் செல்லும் போது வடக்குத் திசை அல்லது கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டும்.
மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் சூரிய உதய நேரத்தை அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.