google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: புழுவாய்ப் பிறக்கினும்

சனி, 20 ஆகஸ்ட், 2022

புழுவாய்ப் பிறக்கினும்

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

_தேவாரம் -நான்காம் திருமுறை- திருநாவுக்கரசர்

தலம்: திருப்பாதிரிப்புலியூர் 
பண்: திருநேரிசை 

திருப்பாதிரிப்புலியூர் என்னும் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது கடலூரின் ஒரு பகுதி.

வேறு பெயர்: திருப்பாப்புலியூர்

சுவாமியின் பெயர்கள்:
தோன்றாத்துணை யீஸ்வரர், பாடலீஸ்வரர்

தேவியாரின் பெயர்கள்:
தோகையம்பிகையம்மை, பெரியநாயகி, அருந்தவநாயகி

பொழிப்புரை :
இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப் புலியூரில் உறையும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...