google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கோபம் மூன்று வகை

வியாழன், 18 நவம்பர், 2021

கோபம் மூன்று வகை

ஔவையார் பாடிய மூதுரை 23

பாடல் :

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.  

எளிமைப் படுத்தப்பட்ட பாடல் :

கல் பிளவோடு ஒப்பர் கயவர் 
கடுஞ்சினத்துப் 
பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே 
வில் பிடித்து 
நீர் கிழிய எய்த வடுப்போல 
மாறுமே 
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

பொருள்:

பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள்.

பிரிந்த தங்கத் துகள்கள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீர் ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...