google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: முலையளவே ஆகுமாம் மூப்பு

வியாழன், 18 நவம்பர், 2021

முலையளவே ஆகுமாம் மூப்பு

 நல்வழி வெண்பா: 39

பெண்பாற் புலவர் அவ்வையார் அருளியது 

பாடல்: 

முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

விளக்கம்:

ஒருவன் எவ்வளவு கல்வி கற்றாலும், முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும்மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன்படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பைப் போல, அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன்படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் பயனேதும்இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?