google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: இந்தப் பாடல்கள் உங்கள் நினைவில் உள்ளனவா?

செவ்வாய், 15 அக்டோபர், 2019

இந்தப் பாடல்கள் உங்கள் நினைவில் உள்ளனவா?


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்
சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்
காரணி கொடையான் கம்பன் தமிழினால் கவி செய்தானே.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியது ஆக்கும் வேரிஅம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே 'ராம' என்ற இரண்டு எழுத்தினால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?