google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

வியாழன், 21 ஏப்ரல், 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

மரகத லிங்கம்...

கேட்டவரங்களை தரும் 
மரகத லிங்கம்... 

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆகர்ஷன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். 

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரகதக் கல்லை லிங்கமாகச் செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.
                                                                             மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும்.

மரகதலிங்களுக்கு செய்யப்படும் பாலாபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாகச் சொல்லப்படுகிறது. 

இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். 
முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?