google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: செப்டம்பர் 2021

வியாழன், 30 செப்டம்பர், 2021

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்ஸி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

பொதுவாக, கிரிப்டோகரன்ஸிகள் என்பவை டோக்கன்கள் அல்லது டிஜிட்டல் "நாணயங்கள்" வடிவத்தில் இருக்கும் மெய்நிகர் அல்லது டிஜிட்டல் பணம்.

பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் , மக்கள் ஒருவருக்கு ஒருவர் பணம் செலுத்துவதற்கான இணைய நிதி வலைப்பின்னல். பல வழிகளில் பிட்காயின் என்பது விசா கார்டு அல்லது பேபால் போன்ற பணம் செலுத்தும் சேவைகளுக்கு இணையானது. பிட்காயின்கள் உண்மையில் கம்ப்யூட்டர் நிரல் வரிசை. ஓவ்வொரு முறை அடுத்தவருக்கு மாறும் போதும் அவை டிஜிட்டல் கையெழுத்திடப்படுகிறது.

வழக்கமான பணத்தில் இருந்து இது எப்படி வேறுபட்டது ?

பிட்காயின் மையம் இல்லாதது. விசா மற்றும் பேபாலை லாப நோக்கிலான நிறுவனங்கள் அவற்றின் பங்குதாரர்களுக்காக நிர்வகிக்கின்றன. ஆனால் பிட்காயின் வலைப்பின்னலை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. இது யாருக்கும் சொந்தமானதும் இல்லை. இது பியர் டு பியர் முறையிலானது. உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பிட்காட்யின் பரிமாற்றத்திற்காக இணைந்து செயல்படுகின்றன.

இவற்றை எப்படி பெறுவது?

ஒரு வாய்ப்பு நீங்களே மைன் செய்யலாம். ஆனால் புதியவர்களுக்கு இது ஏற்றதல்ல. வழக்கமான பணத்தை வாங்குவது போல வாங்குவது சிறந்த வழி. இணையதளங்கள் மற்ற பயனாளிகளுடன் பிட்காயினுக்காக வழக்கமான பணத்தை செலுத்த அனுமதிக்கின்றன. காயின்பேஸ் போன்றவை இன்னும் சிறந்தவை. இவை உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து அவற்றை தற்போதையை பரிமாற்ற விலையில் பிட்காயினாக மாற்றித்தருகின்றன.

இவற்றை எப்படி பாதுகாப்பது?

பிட்காயின்களுக்கு என்று வாலெட் உள்ளன. வாலெட் என்றால் ரகசிய குறியீடு அல்லது என்கிரிப்ஷன் பாதுகாப்பு கொண்ட பைல்களாகும். இந்த கோப்புகள் மற்றவர்களுடன் பிட்காயின் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. இவற்றில் பல வாய்ப்புகள் உள்ளன. மேக்,பிசி மற்றும் ஆண்ட்ராய்டுக்கான பிட்காயின் புரோகிராம் மூலம் நீங்கள் சேமிப்பது ஒரு வழி. அல்லது இந்த சேவையை வழங்கும் அசன் ஆன்லைன் வாலெட் போன்ற இணையதளங்களை தேர்வு செய்யலாம். மூன்றாவது வழி,பிட்காயின் நிரலை அச்சிட்டு பாதுகாப்பு பெட்டகம் போன்றவற்றில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். எல்லாவற்றிலுமே அபாயங்கள் உண்டு. நீங்களாக சேமித்து வைத்தால் தாக்குபவர்களாலோ, ஹார்டு டிரைவ் கிராஷிலோ, அல்லது சாதனத்தைத் தொலைப்பதாலோ இழக்கலாம். வேறு ஒரு இணையதளத்தில் சேமிக்க முடிவு செய்தால் அவர்கள் ஏமாற்றிவிடுவார்களோ என அஞ்சலாம் அல்லது திவாலாகும் அபாயம் இருக்கிறது. பிட்காயின் சந்தை கடுப்படுத்தப்படாதது. எனவே தவறான ஆன்லைன் வாலெட் சேவையை தேர்வு செய்தால் சட்டப்பூர்வமான பாதுகாப்பை நாட முடியாது.  காகித வடிவில் சேமித்தால் இந்த பிரச்சனைகள் இல்லை. ஆனால் இவற்றை தயார் செய்வது சிக்கலானது.  இவற்றையும் தொலைத்து விடும் அபாயம் உண்டு. பிட்காயினைப் பயன்படுத்தும் பலவிதமான வணிகர்கள் இணையத்தில் உள்ளனர்.  

பிட்காயின் மோசடி என்றால்?

மக்கள் டிஜிட்டல் பணத்தை சேமித்து வைக்கும் மற்றும் பரிமாற்றம் செய்யும் இடங்களில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. பரிவர்த்தனை மையத்தில் பாதுகாப்பு மோசமாக இருந்தால் அல்லது ஒருவரது மின்னணு வாலெட் மீது கை வைத்தால் பணம் எளிதாக திருடப்படலாம்.

பிட்காயின் வர்த்தகத்தின் பலன்கள்:

மிகவும் வசதியானது. பிட்காயின் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்யலாம். விடுமுறைகள் கிடையாது. இதில் வங்கிகளோ பணியாளர்களோ தேவையில்லை. எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறை.

இதன் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையிலோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் ஒரு அமைப்பு இல்லை. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை.

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல மத்திய வங்கிகள் பிட்காயின் வாயிலாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில், பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான 'பிளாக்செயின்" பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதே காரணமாகும். ஆனால், பிட்காயின்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றத்திற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவை தேவையில்லை.

கணக்கு வைத்திருப்பவரின் தகவலும் மற்றும் அக்கணக்கு சார்ந்த தகவல்களும் ரசியமாகவும், மறையாக்கம் (என்க்ரிப்ட்) செய்யப்பட்டும் பாதுகாக்கப்படும்.

பிட்காயினில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன?

பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோகமானது. ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாகப் பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரென்றே தெரியாத வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

2009ஆம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010இல் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர் தான். பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.

சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது தெரியும்.

"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை," என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேவ் எ நைஸ் டே உண்மையான அர்த்தம்

இக்காலத்தில் பலர் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வணக்கம் சொல்கிறேன் என்ற நினைப்பில் "குட் மார்னிங் ஹேவ் எ நைஸ் டே " என்கிறார்கள்.

 உண்மையில் "ஹேவ் எ நைஸ் டே " என்றால் "குட் பை".

"Have a nice day" or "Have a good day" means "goodbye".

"Have a nice day" is a friendly way of saying goodbye, especially to customers. 

Eg.:
"Thank you. Have a nice day!"

This phrase is also used to express good wishes when parting.

Eg.:
‘I hope you enjoyed your meal. Thank you and have a nice day!’

Have a nice day is a commonly spoken expression used to conclude a conversation, or end a message by hoping the person to whom it is addressed experiences a pleasant day.

பிற பின்பு.
வணக்கம்.

அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
இப்போது மதுரையில் இருந்து...

திங்கள், 20 செப்டம்பர், 2021

கலைஞரின் திருமண அழைப்பிதழ்

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருமண அழைப்பிதழ்.

சரியான பிள்ளையார் சுழி எது?

பிள்ளையார் சுழியைப் பலரும் பலவாறு எழுதுகிறார்கள். சிலர் தமிழின் ஐந்தாம் உயிரெழுத்தாகிய உகரமாகிய "உ" என்னும் எழுத்தை பிள்ளையார் சுழியாகப் போடுகிறார்கள். சிலர் அவ்வாறு எழுதி அடிக்கோடு (அண்டர்லைன்) இடுகிறார்கள். சிலர் "உ"என்ற எழுத்தின் கீழே இரண்டு அடிக்கோடுகளை இடுகிறார்கள். சிலர் இரண்டு அடிக்கோடுகளை இட்டு அதன் அடியில் ஒரு புள்ளி வைக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரையில் நம்  முன்னோர்கள் பிள்ளையார் சுழியை வேறு மாதிரி எழுதியிருந்தார்கள். இன்னும் அதையே சிலர் பின்பற்றுகிறார்கள். அது எப்படி இருக்கும் என்பதைக் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்
இப்போது மதுரையில் இருந்து.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மூதுரை

மூதுரை 8:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

நல்லவர்களை காண்பதும் நல்லதே, நல்லவர்கள் சொல்லும் பயன் நிறைந்த சொற்களை கேட்பதும் நல்லதே, நல்லவர்களின் உயர்ந்த குணங்களை  பிறரிடம் சொல்வதும் நல்லதே, அத்தகைய நல்லவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லதே தான்.
- அவ்வையார்

மூதுரை 9:

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயவர்களைக் காண்பதும் தீமையே, தீயவர்கள் சொல்லும் நன்மையற்ற சொற்களைக் கேட்பதும் தீமையே, தீயவர்களின் கீழ்மையான குணங்களை  பிறரிடம் சொல்வதும் தீமையே, அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இருப்பதும் தீமையே செய்யும்.
- அவ்வையார்

சனி, 18 செப்டம்பர், 2021

இன்னா நாற்பது 19

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி.
19


நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.

அறிவுடைமை

திருக்குறள் 426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது தறிவு.

மு.வரதராசனார் உரை:
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

மு. கருணாநிதி உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

பரிமேலழகர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம். உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.

மணக்குடவர் உரை:
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

புலியூர்க் கேசிகன் உரை:  
எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை.

Transliteration:

yevva thuraivathu ulakam ulakaththodu
avva thuraiva tharivu

Shuddhananda Bharati:

The Possession of Knowledge:

As moves the world so move the wise in tune with changing times and ways.

GU Pope:

The Possession of Knowledge:

As dwells the world, so with the world to dwell in harmony- this is to wisely live and well.

To live as the world lives, is wisdom.


வியாழன், 16 செப்டம்பர், 2021

கார் கவிழ்ந்தது என்பது சரியா?

விபத்தில் கார் கவிழ்ந்தது என்கிறார்கள். படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது என்பது சரி. ஏனென்றால் அது நீரில் மல்லாக்கச் செல்லும். கார் எப்போதும் குப்புறவாகவே இருக்கும். விபத்தில் அது மல்லாக்கப் புரண்டது என்றோ ஒருக்கணித்தது என்றோ ஏன் சொல்லக் கூடாது? 

கரப்பான் பூச்சி கவிழ்ந்தே இருக்கும். அதைக் கொல்ல ஸ்ப்ரே செய்தால் உடனே மல்லாக்கப் புரண்டு விடும்.

சுடர்விட்டு எரியும் கார்த்திகைச் சிட்டி மல்லாக்க இருக்கும்.

பாத்திரங்களைத் துலக்கிய பின் கவிழ்த்து வைப்பார்கள்.

கமெண்ட் செய்யவும்.

அன்புடன்,

ஆறுமுகம் நடராஜன்

மதுரையில் இருந்து...


செவ்வாய், 7 செப்டம்பர், 2021

திருக்குறள் 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். 

மு.வரதராசன் விளக்கம்:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...