google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: திருக்குறள் 751

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

திருக்குறள் 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். 

மு.வரதராசன் விளக்கம்:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

சேரன் செங்குட்டுவனின் வீரம்

சேரன் செங்குட்டுவனின் வீரத்தை கண்ணகிக்குச் சிலைஎடுத்ததிலிருந்து அறியலாம்.  தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன...