google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மூதுரை

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மூதுரை

மூதுரை 8:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

நல்லவர்களை காண்பதும் நல்லதே, நல்லவர்கள் சொல்லும் பயன் நிறைந்த சொற்களை கேட்பதும் நல்லதே, நல்லவர்களின் உயர்ந்த குணங்களை  பிறரிடம் சொல்வதும் நல்லதே, அத்தகைய நல்லவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லதே தான்.
- அவ்வையார்

மூதுரை 9:

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயவர்களைக் காண்பதும் தீமையே, தீயவர்கள் சொல்லும் நன்மையற்ற சொற்களைக் கேட்பதும் தீமையே, தீயவர்களின் கீழ்மையான குணங்களை  பிறரிடம் சொல்வதும் தீமையே, அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இருப்பதும் தீமையே செய்யும்.
- அவ்வையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...