google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நிலவே என்னிடம் நெருங்காதே

வியாழன், 21 நவம்பர், 2019

நிலவே என்னிடம் நெருங்காதே



வீணை மீரா கிருஷ்ணா வாசித்த நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் வீடியோ 

வசனம்:

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்கொண்ட
உத்தமன் யாரோடி

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்கொண்ட
உத்தமன் யாரோடி  தோழி  ...

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்கொண்ட
உத்தமன் யாரோடி 


பாடல்:

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

ஊமையின் கனவை யாரறிவார்
ஊமையின் கனவை யாரறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடியமேகம் கலையுமுன்னே நீ
பாடவந்தாயோ வெண்ணிலவே

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்... இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...