google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

நின்ற கோலத்தில் அத்திவரதர்




நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர்
ஆகஸ்ட் 1, 2019
அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று முதல்  இள சந்தனம் பட்டாடை உடுத்தி பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.


கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை பக்தர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுனர்.

கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசால் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நின்ற திருக்கோலத்தில் அத்திவரதரை நிறுத்துவதற்கு உண்டான முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நேற்று மாலை 5 மணியுடன் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை தரிசிப்பதற்கு உண்டான கால அவகாசம் நிறைவடைந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு, சரியாக 8:30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை அத்திவரதரை நின்ற திருக்கோலத்தில் நிறுத்துவதற்கு உண்டான பணிகள் இந்து அறநிலை துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் 3 மணியில் இருந்தே பக்தர்கள் நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பகுதிகளில் காத்திருந்தனர்.

இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

சயன திருக்கோலத்தில் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டவர்கள் மீண்டும் நின்ற திருக்கோலத்தில் காண வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதனால் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவ வசதி கழிவறை வசதி குடிநீர் வசதி என அனைத்துமே இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய காலி இடங்களில் 10,000 பக்தர்கள் தங்குவதற்கு உண்டான தற்காலிக கூடாரங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் போது பக்தர்களை கூடாரங்களில் தங்க வைக்கவும் பகுதி பகுதியாக பிரித்து அவர்களை அனுப்பி வைக்கவும்  உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

மேலும் அந்த கூடாரங்களை சுற்றி கழிவறைகளும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரம் அன்னதானமும் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காவலர்களின் எண்ணிக்கை 5,000 இருந்து 7,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களில் காஞ்சிபுரம் நகருக்குள் ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் வந்துள்ளன. அத்தி வரதரை தரிசிக்க கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நன்றி: 



சனி, 3 ஆகஸ்ட், 2019

அத்தி வரதர் யார்?



இவரே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம். பொதுவாக நாம் தரிசிப்பது பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமா ளே ஆவார். அத்தி வரதர் பிரம்மாவால் உருவாக்கப்பட்டவர். திருக்குளத்தில் வாசம் செய்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருவார்.

பிரம்மா காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது சரஸ்வதியை அழைக்கவில்லை. ஆதலால் சரஸ்வதி கோபம் கொண்டாள். பிரம்மா சரஸ்வதிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சரஸ்வதி தேவி, பிரம்மாவின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மாவின் யாகத்தைக் காக்க திருமால் நதிக்கு நடுவில் சயன கோலம் கொண்டார். சரஸ்வதி  வெட்கம் அடைந்து தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மாவின் யாகம் நிறைவு பெற்றதுதனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மா, பெருமாளைப் பணிந்து தொழுதார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்' என்ற திருப்பெயர் கொண்டார்.
பிரம்மா, அத்திமரத்தில் திருமாலை வடித்து வழிபட்டார். பின்னர் ஒருமுறை பிரம்மா அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மா திருமாலை வேண்டினார். திருமாலின் ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார்யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியில் சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்
வாழ்வில் ஒருமுறையேனும் அத்தி வரதரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள். இரண்டாம்முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...