இவரே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம். பொதுவாக நாம் தரிசிப்பது பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமா
ளே
ஆவார். அத்தி வரதர் பிரம்மாவால் உருவாக்கப்பட்டவர். திருக்குளத்தில் வாசம் செய்து கிட்டத்தட்ட
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருவார்.
பிரம்மா காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது சரஸ்வதியை அழைக்கவில்லை. ஆதலால் சரஸ்வதி கோபம் கொண்டாள்.
பிரம்மா சரஸ்வதிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சரஸ்வதி தேவி, பிரம்மாவின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மாவின் யாகத்தைக் காக்க திருமால் நதிக்கு நடுவில் சயன கோலம் கொண்டார். சரஸ்வதி வெட்கம் அடைந்து தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மாவின் யாகம் நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மா, பெருமாளைப் பணிந்து தொழுதார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்' என்ற திருப்பெயர் கொண்டார்.
பிரம்மா, அத்திமரத்தில் திருமாலை வடித்து வழிபட்டார். பின்னர் ஒருமுறை பிரம்மா அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மா திருமாலை வேண்டினார். திருமாலின் ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார். யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியில் சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.
வாழ்வில் ஒருமுறையேனும் அத்தி வரதரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள். இரண்டாம்முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.