google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஆதார் கார்டு

வியாழன், 15 பிப்ரவரி, 2024

ஆதார் கார்டு

 ஆதார் அடையாள அட்டை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. ஆதாரை எதற்காவெல்லாம் பயன்படுத்தலாம்? ஆதார் மூலமான பயன்பாடுகள் என்னென்ன? ஆதார் மூலமான பயன்பாடுகள் மூலம் வசிப்பாளர் எவ்வாறு பயனடைவார்?

இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புமற்றும்/அல்லது ஓர் அமைப்பால் வழங்கப்படும் சேவைகள்/பயன்களைப் பெற வசிப்பாளருக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தருவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட திட்டங்களை வழங்குவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம்.

உணவு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள்- பொதுவினியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்.

வேலைவாய்ப்பு- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுவர்ண ஜெயந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், இந்தியா வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

கல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி பெறும் உரிமை

சமூக உள்ளடக்கம் &சமூகப் பாதுகாப்பு - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஆதி பழங்குடி குழுக்கள் மேம்பாடு, இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்

சுகாதாரச் சேவை: தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஜனஸ்ரீ காப்பீட்டுத் திட்டம், ஆம்ஆத்மி காப்பீட்டுத் திட்டம்

சொத்துப் பரிமாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை போன்ற பிற பயன்பாடுகள்.

2. மாற்றம் செய்யப்பட்ட செல்பேசிகளில் ஆதார் செயல்படுமா?

இல்லை, மாற்றம் செய்யப்பட்ட செல்பேசிகளில் ஆதார் இயங்காது.

3. மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் எனப்படுபவை யாவை?

ஆன்ட்டுராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட் செல்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற கருவிகளில் பல்வேறு ஆன்ட்டுராய்டு இணை அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் வசதியை ஏற்படுத்துவதுதான் மாற்ற நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட கருவிகள், மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் என்ற அழைக்கப்படும்.

4. வசிப்பாளர்களின் ஆதார் பதிவின்போது ஆபரேட்டர் நினைவில் கொள்ள வேண்டிய 15 கட்டளைகள் என்னென்ன?

பதிவு மையத்தில் ஆபரேட்டரின் பணி என்பது வசிப்பாளரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆதாருக்காக பதிவு செய்வது தான். ஆதார் பதிவு மையத்தில் இந்த பணியைச் செய்யும் போது கீழ்க்கண்ட 15 கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.

ஆதார் கிளையண்ட் மென்பொருளில் உங்களின் சொந்த ஆபரேட்டர் பயனர் அடையாளத்தில் உள்நுழைந்து பதிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் இருக்கையிலிருந்து வெளியில் செல்லும்போது மென்பொருளில் இருந்து வெளிவந்து விடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் கணக்கில் வேறு எவரும் உள்நுழைந்து பதிவு செய்யாமல் தடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் பதிவைத் தொடங்கும் போது ஜி.பி.எஸ்சை பதிவு செய்வது ஒருங்கிணைப்புக்கு உதவும்.

ஒவ்வொரு முறை மென்பொருளில் உள்நுழையும் போதும் கணினியில் தேதி, நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பதிவு நிலையத்தின் தள அமைப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆதார் பதிவுக்காக வரும் வசிப்பாளரின் பதற்றத்தைப் போக்கி, அவரை இயல்பான மனநிலையில் வைக்கவும், அதேநிலையில் அவரது தகவல்களை பதிவு செய்யவும் வசதியாக ஆதார் பதிவு/ ஆதார் தகவல் சேர்ப்பு நடைமுறைக்கு முன்பாகவும், நடைமுறையின் போதும் அதுபற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும்.

வசிப்பாளருக்கு ஆதார் பதிவைத் தொடங்குவதற்கு முன்பாக ஆதாரைக் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி, அவர் அதற்கு முன் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு வசிப்பாளரால் வேண்டப்படும் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு வேண்டுகோளுக்கு ஏற்ற வகையில் அனைத்து மூல ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? அவை அனைத்தும் வசிப்பாளருடையது தானா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வசிப்பாளர்களுடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ள வசதியாகவும், ஒருமுறை கடவுச்சொல் சார்ந்த சரிபார்ப்புக்காகவும், ஆன்லைன் தகவல் சேர்ப்பு வசதிக்காகவும் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வசிப்பாளரின் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டனவா? அவற்றில் சரிபார்ப்பவரின் கையெழுத்து/கைரேகை மற்றும் முத்திரை/ இனிஷியல்கள் உள்ளனவா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். அந்த படிவத்தில் வசிப்பாளரின் கையெழுத்து/கைரேகையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வசிப்பாளரின் உடற்கூறு பதிவுகள் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படாது என்பதையும் வசிப்பாளர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறிமுகம் செய்து வைப்பவர்/குடும்பத் தலைவர் மூலமான ஆதார் பதிவு என்றால் விண்ணப்பப் படிவத்தில் அவர்களின் கையெழுத்து/கைரேகையும், அவர்களுக்கான பகுதியில் அவர்களைப் பற்றிய விவரங்களும் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆதார் கிளையண்ட் மென்பொருளில் தகவல் பதிவுக்காக தரப்பட்டுள்ள வரிசைப்படி டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் பதிவு/தகவல் சேர்ப்பின் போது வசிப்பாளருக்கு முன்புள்ள கணினி திரை எப்போதும் இயங்குவதை உறுதி செய்வதுடன், அதில் தெரியும் தகவல்களை பார்த்து, ஆய்வு செய்து அதன் பிறகே பதிவை முடித்து அவர் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆதார் பதிவு முடிவடைந்தவுடன் ஒப்புகைச் சீட்டை அச்சிட்டு, கையெழுத்திட்டு வசிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதேபோல் வசிப்பாளரின் ஒப்புதல் கையெழுத்தையும் பெற வேண்டும்

வசிப்பாளரின் பதிவு/ தகவல் சேர்ப்பு படிவம், மூல ஆவணங்கள், கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் படிவம் ஆகிய அனைத்தும் பதிவு/தகவல் சேர்ப்பு கிளையண்ட் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், அதன்பின் அந்த ஆவணங்கள் அனைத்தும் வசிப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

5. டிமோகிராபிக் தகவல்களை பதிவு செய்வதற்கான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகள் என்ன?

டிமோகிராபிக் தகவல் பதிவுக்கான விதிமுறைகள்: 

சரிபார்க்கப்பட்டபதிவு/ தகவல் சேர்ப்புப் படிவத்தில் இருந்து வசிப்பாளரின் தகவல்களை எடுத்து பதிவுசெய்ய வேண்டும்.

ஆதார் தகவல் சேர்ப்பாக இருந்தால், எந்தெந்த பகுதிகளில் தகவல்கள் சேர்க்கப்படவேண்டுமோ, அந்த பகுதிகள் மட்டும் அடையாளம் காணப்பட்டு நிரப்பப்பட வேண்டும்

வசிப்பாளர்களுடன் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் எதிர்காலத்தில் தொடர்புகொள்ள வசதியாக செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

டெமொகிராபிக் தகவல்களைப் பதிவு செய்யும்போது, அழகியலைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத இடங்களில் இடைவெளி விடுவது, கால்புள்ளி, அரைப்புள்ளி உள்ளிட்டகுறியீடுகளை தவறாகப் பதிவு செய்வது, பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தகாத வார்த்தைகளின் பயன்பாட்டையும், ஒலிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகளையும் தவிர்க்கவேண்டும்.

வசிப்பாளரால் தகவல் வழங்கப்படாத கட்டாயமற்ற பகுதிகளை நிரப்பாமல் காலியாக விட்டுவிடலாம். வசிப்பாளர் தகவல் தராத பகுதிகளில் பொருந்தாது என்பது போன்ற வார்த்தைகளை குறிப்பிட வேண்டாம்.

5 வயதுக்கு உட்பட்ட வசிப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்போது, அவர் தமது தந்தை / தாய் / கணவன் / மனைவி / பாதுகாவலர் பெயரை தெரிவிக்க விரும்பாவிட்டாலோ அல்லது அவருக்கு அந்தத் தகவல்கள் தெரியாவிட்டாலோ அவை கட்டாயமில்லை. வசிப்பாளருக்கான உறவுமுறை என்ற பிரிவில் தகவல்கள் தரப்படவில்லை என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரங்களை பதிவுசெய்யும் போது பெற்றோர்களில் ஒருவர் அல்லது பாதுகாவலரின் பெயரை அவர்களது ஆதார் எண் அல்லது பதிவு எண்ணுடன் சேர்த்து குறிப்பிட வேண்டும். இது கட்டாயமானதாகும்.

பெற்றோர் என்ற இடத்தில் தந்தையின் பெயரை மட்டும்தான் பதிவு செய்யவேண்டும் என்பது கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பும்போது, தாயின் பெயரை மட்டும் கூட பதிவு செய்யலாம்.

குழந்தையின் பெயரைப் பதிவு செய்யும் போது, அதற்கு முன்பாகவே அக்குழந்தையின் தந்தை/தாய்/காப்பாளர் ஆதாருக்காக பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமாகும். ஒருவேளை, பெற்றோர்கள் ஆதார் எண்ணை பெற்றிருக்காவிட்டாலோ அல்லது ஆதாருக்காக பதிவு செய்திருக்காவிட்டாலோ அக்குழந்தையின் விவரங்களைப் பதிவு செய்யமுடியாது.

குடும்பத் தலைவர் அடிப்படையிலான பதிவை மேற்கொள்ளும்போது, குடும்பத் தலைவரின் பெயர், பதிவு எண் / ஆதார் எண், அவருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவு ஆகியவை கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். 

6. வசிப்பாளரின் டெமொகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை பதிவு செய்த பின்னர் ஆபரேட்டர் என்ன செய்ய வேண்டும்?

வசிப்பாளர் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன என்பதை குறிக்கும் வகையில், ஆபரேட்டர் அவரது சொந்த விரல் ரேகையைப் பதிவு செய்யவேண்டும்.

நீங்கள் பதிவு செய்த வசிப்பாளரின் விவரத்திற்கு, இன்னொருவர் கையெழுத்திடுவதை அனுமதிக்காதீர்கள். அதேபோல், மற்றவர்கள் பதிவு செய்த தகவல்களுக்கு நீங்கள் கையெழுத்திடாதீர்கள்.

வசிப்பாளருக்கு உடற்கூறு அடையாள விலக்கு அளிக்கப்பட்டால், அந்தப் பதிவு முடிந்தவுடன் ஆபரேட்டருக்கு பதில், மேற்பார்வையாளர் கைரேகைகளைப் பதிவு செய்யவேண்டும்.

வசிப்பாளரின் தகவல்கள் அறிமுகம் செய்பவர் / குடும்பத் தலைவர் மூலம் சரிபார்க்கப்பட்டால், அதற்கான சரிபார்ப்புத் திரையில் அறிமுகம்செய்பவர் / குடும்பத் தலைவரின் கைரேகையைப் பதிவு செய்யுங்கள்.

ஒரு வசிப்பாளரின் தகவல்களைப் பதிவு செய்யும் போது, அவரை அறிமுகம் செய்து வைப்பவர் அந்த மையத்தில் இல்லையென்றால், சரிபார்ப்பு தொடர்பான குறியீடுகளில் Attach Later என்ற குறியீட்டை தேர்வுசெய்ய வேண்டும். இதன்மூலம் அந்தநாளின் இறுதியில் வசிப்பாளர் குறித்த விவரங்களை அறிமுகம் செய்பவர் சரிபார்க்க முடியும்.

பதிவுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான ரசீது, எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை ஆபரேட்டர் தேர்வு செய்ய முடியும்.

எந்த மொழியில் ரசீது அச்சிடப்பட வேண்டும் என்று வசிப்பாளர்களிடம் ஆபரேட்டர் கேட்க வேண்டும். மொழிப்பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்தால், அந்த மொழியில் ரசீது அச்சிட்டு வழங்கப்படும்.  உதாரணமாக, கணினியின் கட்டமைப்புத்திரையில் உள்ள ஆங்கிலம் அல்லது ஏதேனும் ஓர் உள்ளூர் மொழியில் தேர்வு செய்து அச்சிட முடியும்.

ஆதார் பதிவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், வசிப்பாளரின் கையெழுத்து பெற்று, அதை அவர் தொடர்பான மற்ற ஆவணங்களுடன் சேர்த்து வைக்கவேண்டும். வசிப்பாளரின் சம்மதம்தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு அவரது ஒப்புதல்/நிராகரிப்பு என்பதால் அவை மிகவும் முக்கியமானவையாகும்.

ஆதார் பதிவு முடிவடைந்ததும், அதற்கான ஒப்புகைச் சீட்டில் கையெழுத்திட்டு வசிப்பாளரிடம் வழங்க வேண்டும். ஆதாருக்காக வசிப்பாளர் பதிவு செய்திருக்கிறார் என்பதை எழுத்துமூலம் உறுதி செய்வதற்கான சான்றுதான் ஒப்புகைச்சீட்டு ஆகும். ஒப்புகைச் சீட்டில் பதிவுஎண், தேதி, நேரம் ஆகியவை இடம்பெற்றிருப்பதாலும், தனது ஆதார் எண் எந்தநிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் அதன் தொடர்புமையத்துடன் (1947) தொடர்புகொள்ளும்போது, இந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என்பதாலும், இந்த ஒப்புகைச் சீட்டு மிகவும் முக்கியமானதாகும்.

திருத்த நடைமுறையைப் பயன்படுத்தி வசிப்பாளர் தொடர்பான தகவல்களை எதையாவது திருத்தவேண்டும் என்றால், பதிவு எண், தேதி மற்றும் நேரம் தேவைப்படும். எனவே, அச்சிடப்படும் ஒப்புகைச் சீட்டில் அனைத்து விஷயங்களும் தெளிவாகவும், படிக்கக் கூடியவகையிலும் இருப்பதை ஆபரேட்டர் உறுதி செய்ய வேண்டும்.

ஆபரேட்டரிடம் ஒப்புகைச் சீட்டை ஒப்படைக்கும்போது, கீழ்க்கண்ட தகவல்களை வசிப்பாளரிடம் ஆபரேட்டர் தெரிவிக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது பதிவு எண் என்றும், ஆதார் எண் அல்ல என்பதையும், ஆதார் எண் பின்னர் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் வசிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஒப்புகைச் சீட்டிலும் எழுதப்பட்டிருக்கும்.

வசிப்பாளர்கள் தங்களின் ஒப்புகைச் சீட்டையும், தங்களது குழந்தைகளின் ஒப்புகைச் சீட்டையும் எதிர்கால தகவல் பரிமாற்றத்திற்காக பாதுகாத்து வைக்க வேண்டும்.

அறிமுகம் செய்து வைப்பவர் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்டால், அறிமுகம் செய்துவைப்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது கைரேகையை பதிவு செய்து,  பதிவை உறுதி செய்ய வேண்டும். செல்லுபடியாகக் கூடிய அறிமுகம் செய்பவர் உறுதி செய்தால் மட்டுமே வசிப்பாளருக்கு ஆதார் கிடைக்கும்.

பதிவு செய்த பின்னர்  96 மணி நேரத்திற்குள் வசிப்பாளர் குறித்த விவரங்களை திருத்திக் கொள்ளமுடியும். எனவே, ஏதேனும் தவறு இருந்தால் வசிப்பாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆதார் எண் உருவாக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய, அழைப்பு மையத்தை வசிப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னணு ஆதார் தளம் / ஆதார் தளம் / இணைய தளம் ஆகியவற்றில் பார்க்கலாம்.

ஆதார் எண் உருவாக்கப்பட்டபின், பதிவு நடைமுறையின்போது கொடுக்கப்பட்ட முகவரிக்கு உள்ளூர் அஞ்சல் நிலையம் மூலமாகவோ அல்லது இப்பணிக்கு என நியமிக்கப்பட்ட முகமை மூலமாகவோ வசிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். 

7. சரிபார்ப்பாளர் என்பவர் யார்?

வசிப்பாளர் ஆதார் பதிவு மையத்திற்கு பதிவுசெய்ய வரும்போது, அவர் தரும் ஆவணங்களில் இருந்து அவர் தம் மக்கள் தொகையியல் சார் தகவல்கள் பதியப்படும். ஆவணங்களை சரிபார்க்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மூலம் அவ் ஆவணங்களின் உண்மைத்தன்மை சரி பார்க்கப்படும். அவர்களையே சரிபார்ப்பாளர் என்று கூறுவர். பதிவு மையத்தில் உள்ள சரிபார்ப்பாளர் வசிப்பாளரால் நிரப்பப்பட்ட பதிவு படிவத்தை அவர் சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு சரிபார்ப்பார். பொதுவாக பணியில் இருக்கும் அதிகாரிகள் எண்ணிக்கை போதவில்லை என்றால் இத்தகைய சரிபார்ப்பு நடைமுறைகளை நன்கு அறிந்த ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளை பதிவாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். The verifier present at the Enrolment Centre will verify the documents submitted by the resident against the enrolment form filled by the resident. The services of the retired government officials who are generally well acquainted with such verification procedures should be utilized by the Registrars in case they are unable to spare serving officials for document verification. 

குழு 'சி' / வகுப்பு III ஊழியர்களின் தரவரிசைக் குறையாத, பணியில் இருக்கும் / ஓய்வு பெற்ற அரசு (படைப்பணி மற்றும் CPMF) மற்றும் பொதுத்துறை (வங்கிகளும் சேர்த்து) நிறுவன ஊழியர்களை சரிபார்ப்பாளர்களாக நியமிக்கலாம். பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோக்களில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத போது பதிவாளர் அவுட்சோர்ஸ் முறையில் விற்பனையாளரின் சேவையை இந்தியத்தனித்துவஅடையாளஆணையத்தின் மண்டல அலுவலகத்திலிருந்து ஒப்புதலுடன் சரிபார்ப்பு வழங்குவதன் மூலம் பெறலாம்

பதிவு மையத்தின் அதே விற்பனையாளர் பதிவு முகமைகளில் சரிபார்ப்பாளர் பணியில்அமர்த்தப்படகூடாது. சரிபார்ப்பாளர் களத்திற்கு அணுப்பப்படும்முன்பு மிக நேர்த்தியாக பயிற்றுவிக்கப்பட்டவர் என்பதனை பதிவாளர் உறுதிசெய்ய வேண்டும். தேவையெனில் பதிவாளர் மையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சரிபார்ப்பாளர்களை அமர்த்தலாம். பதிவு தொடங்கும் முன்பு அனைத்து சரிபார்ப்பாளர் விவரமும் அவர் வகிக்கும் பதவியுடன் தெரிவிக்கப்படவேண்டும். அப்பட்டியல் மண்டல அலுவலகங்களுக்கும் பகிரப்பட வேண்டும். 

8. வசிப்பாளருக்கு இப்போது வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலுமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும், எந்த முகவரிக்கு ஆதார் கடிதத்தை அனுப்பி வைக்கும்?

ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றில் எந்த முகவரியில் ஆதார் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி வசிப்பாளரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொள்ளும். வசிப்பாளரின் விருப்பப்படி, அவரிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் அவரது விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிவு செய்யும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...