ஒருமுறை மிகப்பெருங்கூட்டம் சாப்பிடுவதற்குக் கூடிவிட்டது. எல்லோருக்கும் சாப்பாடு போட முடியுமா என்ற கலக்கம் ஏற்பட்டுவிட்டது.
உறவினர்களில் சிறுவர்களும் அடக்கம். அவர்கள் பசி தாங்க மாட்டார்கள் என்று கருதி கொஞ்சம் சாப்பாட்டைத் தனியாக பத்திரப்படுத்தினார்கள்.
ஆனால் என்ன அதிசயம்! சாப்பாடு குறையவே இல்லை. பெரும் கூட்டம் சாப்பிட்டு முடிந்து சென்ற பின்பும் அண்டா அண்டாவாக நிறைய இருந்த சோறு அப்படியே இருந்தது.
பழநிமலை முருகன் தன் அருளையும் ஆசியையும் அன்னத்தை வளரவிட்டு உலகத்தினர் கண்முன் காட்டினான்.
கண்டோர் அனைவரும் வியந்தனர். மிகவும் பரவசமடைந்தனர்.
இதை என் தந்தையாகிய நடராஜன் ஆச்சாரி சொல்வதைக் கேட்டு பதிவிடுகிறேன்.
பிற பின்பு
வணக்கம்
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
இப்போது மதுரையில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.