சிலர்அந்தக் கணக்கு ஒரு நொடிக்கு ஆனது என்று நினைக்கிறார்கள். சிலர் அது ஒரு வினாடிக்கு ஆனது என்று நினைக்கிறார்கள்.
வினாடியில் கூறுவது பழைய முறை.
சம்பந்தப்பட்டவர்கள் இந்த அறிக்கையை வினாடிக்கு என்று சொல்லாமல் நொடிக்கு இவ்வளவு நீர் என்று கணக்கிட்டுச் சொன்னால் எல்லோருக்கும் புரியும். அல்லது இரண்டு விதமாகவும் சொல்லலாம். இது குழப்பத்தைத் தவிர்க்க உதவும்.
ஆங்கிலத்தில் கியூசெக்ஸ் என்று தெளிவாகச் சொல்கிறார்கள். ஒரு செகண்டுக்கு இத்தனை கன அடி திறக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.
cusecs: a unit of flow (especially of water) equal to one cubic foot per second.
இப்போது வினாடிக்கும் நொடிக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.
இரண்டரை நாழிகை கொண்டது ஒரு மணி நேரம்.
ஒரு நாழிகைக்கு 24 நிமிடம்.
60 வினாடி என்பது ஒரு நாழிகை.
60 வினாடி என்பது 24 நிமிடம்.
60 நொடி என்பது ஒரு நிமிடம்.
அப்படியானால்
ஒரு வினாடி என்பது 24 நொடி.
எடுத்துக்காட்டாக மேட்டூர் அணை நிலவரம் இருமொழிகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Mettur Dam Water Level on 02-07-2021: 83.290/120 அடி/Feet
Inflow: 1100 கன அடி/Cusecs
Outflow: 15,000 கன அடி/Cusecs
Available Water: 43.315/93.47 T.M.C
இதிலிருந்து எல்லோரும் நொடியை தவறாக வினாடி என்கிறார்கள் என்பது புரிகிறது. ஆகவே தயவுசெய்து நொடி என்று குறிப்பிடவும்.
பிற பின்பு
வணக்கம்
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.