google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: 93 வயது அப்பாவின் தடுப்பூசி சர்டிபிகேட்

புதன், 21 ஜூலை, 2021

93 வயது அப்பாவின் தடுப்பூசி சர்டிபிகேட்

சில ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவின் இடுப்பிலுள்ள பந்துக்கிண்ண மூட்டு உடைந்ததால் Bipolar hemi orthro plasty அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. மேலும் வயதானதால் இப்போது அவரால் நடக்க முடியவில்லை. ஆகையால் தடுப்பூசியை பொன்னமராவதி புதுப்பட்டியில் வீட்டுக்கே வந்து போட்டுவிடும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி ஜூன் 26, 2021 அன்று வீட்டுக்கே வந்து அவருக்கு தடுப்பூசி போட்டார்கள். 

அப்பாவின் பெயர் நடராஜன். தடுப்பூசி சர்டிபிகேட்டில் அவருடைய அப்பாவின் பெயராகிய முத்துக்குமார் என்று இருந்தது. இணையதளத்தில் ஒரு முறை பெயரைத் திருத்தும் வசதி உண்டு.
அதன்படி சரி செய்யப்பட்டது.

சுகாதாரத் துறையின் அன்பும்,  பரிவும், துரித நடவடிக்கையும், பாராட்டத்தக்கனவாகும். 

தடுப்பூசி போட்டுக்கொள்வது நமக்கு மட்டும் அல்ல இந்த உலகத்துக்கே நல்லது என்கிறார் என் அப்பா. உண்மைதானே!

பிற பின்பு
வணக்கம்
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
தற்போது மதுரையிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...