google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நகைக்கடை

திங்கள், 21 ஜூன், 2021

நகைக்கடை

இன்று 21 ஜூன் 2021. கொரோனாவின் இரண்டாம் தாக்கத்தில் இருக்கிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. பலவிதமான கடைகளும் தொழில்களும் செயல்படுகின்றன. ஆனால் நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. ரூபாய் நோட்டில் பரவாத கொரோனா தொற்றா நகைகளில் இருந்து தொற்றிவிடப்போகிறது! முருங்கைக் காயைத் திருகிப் பார்த்து வாங்குகிறார்கள். திருப்தி இல்லை என்றால் வாங்காமல் விட்டுவிடுவார்கள். தேங்காயை குலுக்கியும் விரலால் சுண்டியும் வாங்குகிறார்கள் . மாம்பழத்தை முகர்ந்து பார்த்து வாங்குகிறார்கள். இங்ஙனம் காய்கறிகளும்   பழங்களும் பலராலும் வாங்கப்படுகின்றன. நகைக்கடைகளில் ஸ்பிரே செய்கிறார்கள். டிஸ்இன்பெக்ட் செய்கிறார்கள். ஒரே நேரத்தில் ஆளாளுக்கு அள்ள முடியாது. போட்டுப் பார்த்த நகைகள் டிஸ்இன்பெக்ட் செய்யப்படுகின்றன. ஆகவே தயவு செய்து மூடப்பட்டு உள்ள நகைக்கடைகளைத் திறந்து       விற்பனை செய்ய உத்தரவிடுமாறு மாண்புமிகு முதல்வரை வணக்கத்துடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் ஆறுமுகம் நடராஜன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?