ஒருமுறை ஓர் உழவனின் நோய்வாய்ப்பட்ட மாட்டுக்கு ஊசி போட மாட்டாஸ்பத்திரி டாக்டரிடம் டிஸ்டில்டு வாட்டர் இல்லை. அவர் ஆக்வா (Aqua) என்று எழுதிக் கொடுத்து வாங்கிவரச் சொன்னார். அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இது புரியாது. எந்த மருந்துக்கடைக்குப் போனாலும் இல்லை என்றார்கள். சில கடைக்காரர்கள் புதுக்கோட்டையில் அல்லது திருச்சியில் கிடைக்கலாம் என்றார்கள். எழுத்து புரியவில்லை என்றார்கள். முருகன் மெடிக்கல்ஸில் தர்மலிங்கம் அவர்கள் கடைக்குள்ளேயே வழக்கம் போல உலாத்திக் கொண்டு இருந்தார்கள். டாக்டர் சீட்டு காண்பிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் டிஸ்டில்டு வாட்டரை எடுத்துக் கொடுத்துவிட்டு ஐந்து பைசா கொடுங்கள் என்றார். மாட்டுக்காரருக்குச் சந்தேகம் அப்பிக் கொண்டது. வெறும் 5 பைசாவா! திருச்சிக்குப் போக வேண்டும் என்றார்களே! அவர் தயங்கினார். இவர் தைரியம் சொன்னார். அதுவே சரியான டிஸ்பென்சரியில் கொடுக்கப்பட்ட ஊசிக்கான நீர் ஆகும்.
ஒப்பற்ற மருந்துக்கடைக்காரர். இப்போது நம்மிடையே இல்லை.
பிற பின்பு.
அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.