திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின்
பிரதான நோக்கமே திருமணம் வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. மணவாழ்க்கை சிலருக்கு
மிக எளிதாக கூடி வந்து விடும். ஒரு சிலருக்கு சிறிது முயற்சி களின் மூலம் நடக்கிறது.
பலருக்கு கிரகதோஷ அம்சங்களால் பல ஜாதகங்களை பார்த்து பிரம்மப் பிரயத்தனம்
செய்த பிறகு தான் திருமண பந்தம் கூடி வருகிறது. திருமணம் என்றவுடன் பிள்ளையார்சுழி போடுவதுபோல் முதலில் நிற்பது ஜாதகம்தான். கல்யாணப் பேச்சை எடுத்ததுமே.
ஜாதகம் பார்த்தாச்சா?
கிரக பலன் என்ன சொல்லுது.
தோஷம் இருக்கா என்று உற்றார், உறவினர், நண்பர்கள்
என மாறி மாறி கேட்பார்கள்.
சிலருக்கு திருமண பிராப்தம்
கூடிவராமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லா வகையிலும் முயற்சி செய்தாகி விட்டது. பலவகைகளில் ஜோதிடமும்
பார்த்தாகி விட்டது. பல முறை குருபலன் வந்து போய் விட்டது. பல கோயில்கள்
சுற்றியும், பரிகார பூஜைகள் செய்தும் கல்யாண யோகம் இன்னும் கூடி வரவில்லை என எத்தனையோ பேர் ஏக்கப் பெருமூச்சு
விடுகிறார்கள். இதற்கு ஜோதிட சாஸ்திரம்
கூறும் தீர்வு என்ன? ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞானமும், மெய் ஞானமும் கலந்த ஓர் கலவையாகும்.
இந்த கலவையை நம் முன்னோர்கள்
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள்தான். அவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றது என்றால் அது மிகையாகாது.
பிராப்தம் கர்மா
ஜாதகம் என்பது நாம் பிறக்கும்போது நவகிரகங்கள்
எந்தெந்த ராசி கட்டத்தில் இருக்கின்றன
என்பதை நமக்கு தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இதன் மூலம் நம்முடைய யோக, அவயோகங்களை
அறிந்து கொள்ள முடியும். இதில் சில விஷயங்கள்
நம் சாஸ்திர கணக்கிற்கு அப்பாற்பட்டவையாகும். அதுதான் நம்முடைய கர்ம வினை. அதைத்தான்
நாம் பிராரப்தம்,
கொடுப்பினை என்று சொல்கிறோம். ஜாதகப்படி
குழந்தை பாக்யம் உண்டு என்று கணித்து சொல்கிறோம்.
ஆனால் இத்தனை ஆண், இத்தனை பெண் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. பூமி யோகம், வீடு யோகம் உண்டு.
ஆனால் ஒன்றா, மூன்றா, நான்கா என்று சொல்ல முடியாது.
அதை அந்த இறைசக்தி முன்கூட்டியே
முடிவு செய்து விடுகின்றது. இதை தான் நாம் வாங்கி வந்த வரம் என்று சொல்கிறோம். பரிகாரங்கள்,
நேர்த்திக்கடன்கள் போன்றவை எல்லாம் எந்தக் காலத்திலும் வீண் போகாது. பகவானுக்காக
செலவழிக்கப்படும் பணமும், நேரமும் நிச்சயம் பலன் தரும். ஒரு சிலருக்கு
உடனே பலன் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு சிறிது தாமதமாகிறது. இதற்கு காரணம் அவரவர் ஜாதக கட்டத்தில்
உள்ள கிரக சேர்க்கைகள், திசா புக்திகளாகும்.
திருமண அமைப்பு தோஷம் யோகம் பொருத்தம்
திருமண அமைப்பில் ஜாதக பலம் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. இதில் பிரதானமாக முதலில் லக்னம் இதிலிருந்துதான் நாம் மற்ற அமைப்புகளை
கணக்கிடுகின்றோம். இதில் திருமண விஷயமாக
2, 4, 5, 7, 8 ஆகிய வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கல்யாண யோகமும், தோஷமும் இந்த வீடுகளில் இருந்துதான்
அறியப்படுகிறது. இத்துடன் தேவகுரு என்ற குருபகவானும், அசுர குரு, களத்திரகாரகன் என்ற சுக்கிர பகவானும் முக்கியமாக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது இந்த இருவரின் பலத்தை பார்ப்பது மிக முக்கியமும், அவசியமுமாகும்.
குருவின் அதிகாரம்
சாதாரணமாக திருமணம் என்றவுடன்
எல்லோரும் குருபலம் உள்ளதா என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு இவரின் பங்கு மிகவும் முக்கியமானது. நம் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள்
இவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தன புத்திரகாரகன் என்ற அமைப்பை பெற்றவர்.
காசு, பணம் என்னும் பொருட் செல்வத்தையும், புத்திரம்
என்ற குழந்தைச்
செல்வத்தையும் அருளக்கூடியவர். மேலும் இவரை போககாரகன்
என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள். பெண்கள் ஜாதகத்தில்
இவரை பர்த்தாகாரகன் என்று குறிப்பிட்டு சொல்கிறார்கள். அதாவது கணவனின் தன்மைகளை பற்றி தெரிவிக்கும்
கிரகம் ஆகும். இப்படி இவருக்கு பல்வேறு சிறப்புக்கள்
பார்வை யோகம் எல்லாம் இருந்தாலும்,
குரு இருக்கும்
இடம் பாழ்.
பார்க்கும் இடம் விருத்தி என்பதற்கேற்ப பலாபலன்கள்
அமையும். குறிப்பாக
கல்யாண வாழ்க்கையை
பற்றி பார்க்கும்போது குருபகவான் லக்னத்திற்கு 2, 5, 7, 12 போன்ற இடங்களில்
பிற கிரகங்களுடன்
சேராமல் தனித்து இருப்பது, அந்தணன் தனித்து இருந்தால்
அவதிகள் மெத்த உண்டு என்பதற்கேற்ப
பல்வேறு வகையில் நிம்மதியற்ற தன்மை, கருத்து வேறுபாடுகள்,
புத்திரதோஷம், கவுரவ பாதிப்பு, கேந்திராதிபத்ய தோஷம், குல தர்மத்திற்கு
விரோதமான செயல்கள்,
படுக்கை சுகக் குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள்
இருக்கும். ஆகையால், திருமண விஷயத்தில்
குருவினுடைய அமைப்பை முக்கியமாக பார்ப்பது
மிகவும் அவசியமாகும்.
களத்திரகாரகன்
ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது மிக முக்கியமாக நாம் சுக்கிரனின் நிலையைப் பார்க்க வேண்டும்.
இவர் நீச்சம் அடையாமல் இருப்பது சிறப்பு. சுக்கிரன்
களத்திரகாரகன் என்பதால் இவர் ஏழாம் வீட்டில் இருப்பது களத்திரதோஷமாகும். மேலும், இவர் 6, 8, 12 போன்ற ஸ்தானாதிபதிகளுடன் இணையாமல் இருப்பது நன்மையைத்
தரும். சுக்கிரனின்
அம்சங்கள் மிகவும் விசேஷமானவை. ஆகையால்தான்
அவருக்குத் திருமண வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம்.
சுக்கிரன் என்றாலே சுகம், உல்லாசம், மோகம், காதல், காமம், களியாட்டம், இச்சை, ஆசை, போகம், கவித்துவம், கற்பனை, கலை, இசை, ஆடல், பாடல், நடனம், நாட்டியம்,
சிற்றின்பத்தின் ஊற்று, சுக்கிலத்தின் அதிபதி என்று பல்வேறு சுகபோகங்களை வாரி வழங்கக்கூடிய ஆற்றல், வலிமை என அனைத்தும் நிரம்பப்பெற்ற விடிவெள்ளிதான் சுக்கிரன். ஆண்கள் ஜாதகத்தில் மனைவி யோகத்தையும், பெண்கள் ஜாதகத்தில் இல்வாழ்க்கை
இன்பத்தையும் அருளக்கூடியவர்.
ஆண்களுக்கு சிற்றின்ப கிளர்ச்சியையும், சுக்கிலவீர்ய சக்தியையும் தருபவர். பெண்களுக்கு அழகு, கவர்ச்சி, காந்தப் பார்வை, அசத்தும் உடல் அமைப்பு, மோகமான நளின நடை, லட்சுமி கரம் போன்றவற்றை
அளிப்பவர். இவர் நம்முடைய வாழ்க்கையில்
ஏற்படக்கூடிய சுப கீர்த்தி, அப கீர்த்தி, கௌரவம், அசாபாசங்களை தீர்மானிக்கக் கூடியவர். ஆகையால் இவரின் பலம் ஜாதக கட்டத்தில் மிகமிக அவசியம்.
ஜாதக தோஷங்கள்
1. செவ்வாய்
செயல் ஆற்றல்மிக்க பராக்கிரமம்
உள்ள கிரகம் செவ்வாய் ஆகும். உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர், வெப்பத்தை
வெளிப்படுத்தக்கூடியவர். ஆண்மகனின்
ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்திருந்தால்தான் ஊக்கம், தன்னம்பிக்கை, ஆண்மை போன்றவை மேம்படும்.
உடல் உறவில் வீரியத்துடன் ஈடுபட முடியும். பெண்கள் ஜாதகத்தில் பூப்படைதல்,
மாதவிடாய், உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி, பாலுணர்வு
போன்றவற்றை தூண்டக்கூடியவர். ஆகையால்தான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகத்தை சேர்க்கும்போது மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் ஆண், பெண் சேர்க்கையே
வம்சம் விருத்தியடைய
முக்கியமானது. இருவருக்கும்
அந்த இச்சையைத்
தருவதில் செவ்வாய்க்கு
முதலிடமும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.
இதை நம் முன்னோர்கள்
தோஷம் என்று பிரித்து அந்த வகையான ஜாதகங்களை
ஒன்று சேர்த்து இல்லற வாழ்வில் இருவரும் சரிசமமாக இன்பம் பெற வழிவகை செய்தார்கள்.
இதைத்தவிர செவ்வாய் தோஷம் வேறு எதுவும் இல்லை. இத்தகைய வீர்யமிக்க
செவ்வாய் நம் ஜாதகத்தில் லக்னத்திற்கு
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால்
செவ்வாய் தோஷம் என்கிறோம். இதற்கேற்ப
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள்
இரண்டைச் சேர்ப்பதன்
மூலம் தோஷம் சமன் அடைகிறது.
பெரும்பாலான ஜாதகங்களில்
அதாவது 90% சதவீதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும்.
தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக, செவ்வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை
சேர்க்கக் கூடாது. அதாவது 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன்
சேர்க்கக் கூடாது.
2. ராகுகேது
லக்னத்தில் 2, 7, 8 ஆகிய இடங்களில்
ராகு அல்லது கேது இருப்பதால்
சர்ப்பதோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த தோஷ அமைப்புள்ள
ஜாதகங்களை அதே சம தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்ப்பது
தோஷ சமன்.
3. மாங்கல்ய தோஷம்
பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு
எட்டாம் இடத்தில் ராகு, கேது, சனி, சூரியன் போன்ற கிரகங்கள்
இருப்பது மாங்கல்ய தோஷம், அந்த எட்டாம் வீட்டை குரு மற்றும் சுப கிரகங்கள்
பார்த்தால் தோஷ நிவர்த்தி.
4. புத்திர தோஷம்
லக்னத்திற்கு ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம். இந்த இடத்தில் ராகு, கேது மற்றும் நீச்ச கிரகங்கள்
இருந்தால் புத்திர தோஷம். மேலும் 6,
8க்கு உடையவர்கள்
ஐந்தாம் இடத்தில் இருந்தால் குழந்தை பாக்யம் தாமதமாகலாம்.
மேலும், பெண்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டையும் பார்ப்பது
அவசியமாகும்.
நட்சத்திர விஷயங்கள்
ஒரு காலத்தில் வெறும் நட்சத்திர பொருத்தம்,
பெயர் ராசிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தார்கள்.
அது அந்த காலகட்ட பாரம்பரியம்,
பரம்பரை, கூட்டுக்குடும்பம், உறவின் வலிமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், கலாச்சாரம்,
பண்பாடு போன்றவற்றால்
எல்லாம் ஒத்துப் போனது. தற்காலத்தில்
வெறும் நட்சத்திர
பொருத்தம் பார்த்து ஏழு, எட்டு என்று கணக்கு பார்ப்பது சரிபடாது.
முக்கியமாக ஜாதகப் பொருத்தமும், யோகமும் சம தோஷமும் தேவை. ஜோதிடத்தில்
பல விஷயங்கள்
ஆதாரம் இல்லாமல் மக்களிடையே பரப்பப்பட்டு
விட்டன. உதாரணமாக ஒருவருக்கு ஏதாவது கஷ்டம், நஷ்டம், இழப்பு, நோய், வறுமை என்று ஏற்பட்டால் உடனே அவருக்கு 7½ பிடித்து ஆட்டுகிறது. அஷ்டமத்து
சனி ஆட்டுகிறது
என்றும் சொல்வார்கள்.
அதே நேரத்தில் ஒருவருக்கு
செல்வம், செல்வாக்கு,
பட்டம், பதவி, யோகம், அதிர்ஷ்டம்
என்று உயர்வு அடைந்தால் அவருக்கு சுக்கிரன் கொடுக்கிறார்.
சுக்கிர தசை அடிக்குது என்று சொல்வார்கள். இவை இரண்டுமே தவறானவையாகும். அவரவர்கள் ஜாதக அமைப்புப்படி
யோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். அதேபோல் அவயோகத்தை
எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். ஆகையால் ஜாதக கிரக அமைப்புக்களை
சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகங்களை
சேர்ப்பதே சிறந்த வழியாகும்.
கோச்சார கிரக அமைப்பு
கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாறுதல்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி,
குருப் பெயர்ச்சி,
ராகுகேது பெயர்ச்சி
போன்றவையாகும். இதனால் ஒரு சிலருக்கு
மிகப்பெரிய மாற்றங்கள்
ஏற்படும். ஒரு சிலருக்கு சரியாகப் பலன் கிடைக்காது.
கோச்சாரத்தில் குருபலன் பற்றி எல்லோரும்
அறிவார்கள். குரு பலன் வந்துவிட்டதா
என்று கேட்பார்கள்.
எனினும் இந்த குரு மாறுவதால்
எல்லா மாற்றங்களும்
நிகழுவதில்லை. குருபலன் இல்லாதபோதும் திருமணம் கூடி வரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுக்தி அந்தர யோக நேரமே நமக்கு சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி
தருகின்றன.
ஆகையால், குரு பலன் இல்லையே என்ற கவலை வேண்டாம்.
எட்டாமிடத்தில் கோச்சாரத்தில் குரு இருந்தாலும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் படுவதால் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும்.
ஜென்ம குருவாக இருந்தாலும் குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதால் திருமண யோகத்தை கொடுப்பார். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, திருமண வயதில் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ஏழரைச் சனி நடந்தால் சுபயோக சுப பாக்யம் கிடைக்கும்.
பெரியவர்களுக்கு விரய சனி நடக்கும்போது
குடும்பத்தில் சுபச் செலவுகளை சனீஸ்வரர்
ஏற்படுத்தி வைப்பார்.
தன குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக வரும்போது திருமண பிராப்தத்தை தருவார். கோச்சார அமைப்பில்
ராகுகேது இருக்கும்
ராசியை குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள்
வந்து சேரும் பொழுதும் அல்லது கடந்து செல்லும் போதும் அல்லது பார்க்கும் பொழுதும் சுப விசேஷங்கள்
கூடிவரும். ராகுகேது ஒருவரின் ராசிக்கு
2, 3, 5, 6, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது
கல்யாண யோகம் உண்டு. ஆகையால் எதற்குமே நேரம், காலம் மிக முக்கியமாகும். அதைவிட நமக்கு அனுபவிக்கும்
பிராரப்தம் இருப்பது அவசியம். இவை இரண்டுமே இருப்பது கிரகங்களிடம்.
_ இன்டர்நெட்டில் இருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.