google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க

புதன், 27 மார்ச், 2019

திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க


“மணப்பெண் அலங்காரம்” என்பது எல்லா சமூகத்தினரும் தங்கள் தங்கள் சமய, கலச்சாரத்திற்கு ஏற்ப திருமணமாகப் போகும் பெண்ணை அலங்கரிப்பது என கூறலாம். தமிழர் சமூகத்தை பொறுத்தளவில் மணப் பெண் அலங்காரம்  எங்கள் கலாச்சார பாரம்பரியத்தை முதன்மைப் படுத்தி தொன்று தொட்டு பின்பற்றப் பெற்று வந்துள்ளது.

இத் தினத்தில் மணப் பெண் சேலை அணிவித்து, மூக்குத்தி, காதணி, கொண்டை, நகைகள், பூ மாலை என்பன அணியப் பெற்று தமது சமய, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெண்ணாக தோற்றமளிப்பாள். இம் முறையானது தற்போது ஆடம்பரம் மிக்கதாக வளர்ந்து அதிமுக்கிய இடத்தை பெற்றுள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப அழகுசாதனப் பொருட்களைப் பயன் படுத்தி திருமண நாளில் திருமணப் பெண்ணை அலங்காரம் செய்கிறார்கள். திருமணமாகும் நாள் ஒரு பெண்ணின் புனிதமான நாளாகவும், மகிழ்ச்சியில் பூரித்து இன்புற்று இருக்கும் நாளாகவும் அமைவதால் அப் பெண்ணின் அதிஉயர் அழகுத் தோற்றத்தை எடுத்துக் காட்டுவதற்காக மணப் பெண் அலங்காரம் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.

முக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல், வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை கலந்து உடல் முழுவதும், பூசுதல் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பண்டிகையை யொட்டி மருதாணி இட்டுக் கொள்ளுதல் போன்றவை அவர்களது தலைமுடி, முகம், கைகால்கள் ஆகியவற்றை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள உதவியது.

ஆனால் இன்றைய சூழலில் வாழும் பெண்கள் இயற்கை வளம் குற்றிய இடங்களில் வாழ்வதாலும், படிப்பு, வேலை மற்றும் உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவாலும், ஓய்வின்மையாலும் பெண்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.  அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, இயயற்கை அழகும் கெட்டு விடுகின்றது.

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் குறைந்தது 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். திருமணம் நிச்சயமானவுடன் அவர்களுக்கு தங்களை அழகு படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகிறது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது.

மேலும் 3 மாதம், ஒரு மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களை தயார் செய்ய பார்லர்களில் வித விதமான விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.

மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்ய வேண்டும், என்னென்ன மேக்அப் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் தினத்தன்று மணப்பெண்னணின் முகத்திற்கு மேக்அப் போட்டு அலங்கரித்து புடைவைகள், அணிகலன்கல் அணிவிப்பது மட்டுமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. அது மட்டுமன்றி உடை, நகைகள் போன்றவை அனைத்தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

3 மாதங்களுக்கு முன்பு
மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும்.

அரைத்தேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும்.

கனிந்த தக்காளிபழ சாறு எடுத்து காலையில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..

வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில்ல் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்..

பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் எல்லாம் மறைந்து முகம் மலர்ந்து தோன்றும்.

தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.. முகத்திற்கு கிரீம் லோஷன், மொய் ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை.

நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது..

சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை.

வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஒரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள்.

நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும்.

கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய்யை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்..

உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.. கடைகளில் விற்கும் ஹோண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹேண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹேண்ட் கிரீம் தாயாரிக்கலாம்..

நகங்களில் அவ்வப்போது ஒலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கல்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.

இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளீச்சிங் பேஷியல் அல்லது கோல்டன் பேஷியல் ஆகியவற்றை தவறாமல் செய்து கொள்வது நல்லது.  இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலை முடியை பராமரிப்பதற்கும் சூடான எண்ணையில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர், ஹைபிரிகுவன்சியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன், பொடுகு, தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாக செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்தவிதமான தோல் பிரச்சினை, பொடுகுப் பிரச்சினைகளோ, கை, கால், நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளோ வராமல் தவிர்க்கலாம்.

முதலில் தலை முடிக்கு சிறப்பான சூட்டுப் பருவத்தில் எண்ணையில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளீச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஷியல் செய்து முகத்தின் சதைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக் கச் செய்யலாம். கை, கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளீச்சிங் செய்து, பிறகு வேண்டாத முடியை நீக்க வெக்சிங் செய்கிறோம்.

இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டு மல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும், நகங்களையும் அழகு மிளிரச்செய்யலாம். திருமணத்துக்கு முன் உடல் முழுவதையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், சுறு சுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும்.

தினமும் 4-5 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும். அசைவ உணவுகளின் அளவைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும். அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும்.

ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் தோடம்பழ ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும்இறந்த செல்கள்நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போதுமில்க் பாத்உள்ளது. தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கும் தேவையான ஜெல்லும் அதில் கலந்திருக்கும்.

முதலில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி உடலில் பூசி தேய்த்துஸ்கிரப்செய்துவிட்டு, பின்புஆவி பாத்கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மில்க் பாத் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உடல் முழுக்கமாஸ்க்போடப்படும். இதனால் உடல் முழுக்க உள்ள சருமம் ஒரே நிறத்தில் தோன்றும். பளபளப்பும் தோன்றும். இதனை திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

சில பெண்கள்வையின் தெரபியும் எடுத்துக்கொள்கிறார்கள். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து வையின் கலந்த நீரில் குளிக்கவைத்தல் போன்றவை இதன் கட்டங் களாகும். இந்த தெரபிக்கான வையின் தனித் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பால் பிடிக்காதவர்கள் வையினில் குளிக்கிறார்கள்.

முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட் களை முதலில் பயன்படுத்த வேண்டும். ”நோர்மல் ஸ்கின்கொண்டவர்கள் ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணெய்த்தன்மை சருமத்தை கொண்டவர்கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம் பழச்சாறை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவி விடவேண்டும். இது லேசான எரிச் சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும்.

சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணெய்த் தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்தி விடலாம். ஆனால் கருப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன் றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பூ போட்டு கழுவி, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை முடியில் மட்டும்தான் புரட்ட வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.

கூந்தல்டிரை ஹெயர்ஆக இருந்தால் தே.எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும். பின்பு சுடு தண்ணீரில் டவலை நனைத்து பிழிந்து, தலையில் கூந்தலை சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 15 - 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்போ போட்டு கழுவ வேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

கூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியிருக்கும்.
ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை: நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும்.

அழகு நிலையத்தில் இதற்காகஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு:
முகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப் படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார் வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள்வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணி நேரம் ஆகிவிடும்

திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள்ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.

மூன்று நாட்களுக்கு முன்பு:
பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால் கை நக பராமரிப்பு, வாக்சிங், பேஷ்யல், பொடி ட்ரீட்மென்ட் மற்றும் மெகந்தி போன்றவைகளை போட்டுக்கொள்ள வேண்டும். இவைகளை செய்த பின்பு மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. வெயிலில் அலைவது, உடலில் மாசு படிவது, அலைச்சலை ஏற்படுத்திக்கொள்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு:
திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கை, கால்களில் மெஹந்தி எனப்படும். மருதாணியால் போடும் டிசைன்களை இப்பொழுது பலரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். மணமகள் மருதாணி அலங்காரம் என்பது முழங்கை வரை போடப்படும். ராஜஸ்தானி (இந்திய) மாதிரியாகவோ அல்லது அரேபிய டிசைனாகவோ போட்டுக் கொள்ளலாம்.

கால்களுக் கும் கொலுசு டிசைன் முதல் காலை முற்றிலும் மூடும் ராஜஸ்தானி டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். தங்க கலர், சில்வர் கலர், கிலிட்டர்ஸ் ஆகியவற்றையும் வரவேற்பு நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்.

நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.

திருமணத்தன்று:
முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங் காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும்.

வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே நேரத்தில் மொடர்ன் தோற்றத்தில் மணப் பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.



மணமகன் அலங்காரம்:
திருமணம் என்று சொன்னாலே மணமக்களின் முகத்தில் ஒருவித மாற்றம்  தெரியும். குறிப்பாக மணமகளில் நன்கு தெரியும்.  திருமணத்தன்று இன்னும் அழகாக காணப்பட அவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று, பலவித பராமரிப்புகளை மேற்கொள்வார்கள்.

இத்தகைய அழகு மெருகூட்டல் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கு தேவையான ஒன்றே. ஆகவே திருமணத்தன்று மணமகன் அழகாக காணப்படுவதற்கு, ஒருசில பராமரிப்புகள் என்று சொல்வதை விட, செயல்களை தினமும் செய்து வந்தால், நிச்சயம் அழகாக ஜொலிக்க முடியும்.

பொதுவாக பெண்கள் அழகானவர்கள் என்று சொல்லப்படுவதற்கு காரணம் அவர்கள் அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். எனவே தான், அவர்கள் திருமணத்தன்று மிகவும் அழகாக காணப்படுகின்றனர்.

ஆனால் ஆண்கள் திருமணத்தின் போதும் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால், தமது இயற்கையான அழகையும் சிதைத்து விடுகின்றார்கள்.

ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் முகப்பருக்களால், கரும்புள்ளிகளினாலும்  பாதிக்கப் படுகின்றனர். இத்தகைய பருக்கள், மறுக்கள் திருமணத்தன்றும் இருந்தால் நன்றாக இருக்குமா? மணமகளுக்கே முகத்தைப் பார்க்க அருக்குளிப்பாக இருக்குமல்லவா!

திருமணத்திற்கு வருவோர் ஜோடியாக பார்க்கும்போது. மணமகள் அழகாகவும் மணமகன் அநாகரிகமாகவும் இருந்தால் பொருத்தமில்லாத ஜோடி என முகம் சுழிப்பார்களல்லவா.

இவர்கள் எல்லோரையும் மகிழ வைத்து திருமணத்தன்றும், அதன் பின்பும் அழகான மணமகனாக திகழ ஆண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

ஃபேஸ் வாஷ்
முகத்திற்கு சோப்பை பயன்படுத்தி கழுவுவதை விட, ஏதேனும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். ஏனெனில் சோப்பானது சருமத்தை அதிக வறட்சியடையச் செய்யும். குறிப்பாக இரவில் படுக்கும் முன், தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவினால், முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

எலுமிச்சை ஜூஸ்
பெரும்பாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், முகத்தில் பருக்கள் வருவதோடு, உடைந்து பரவவும் ஆரம்பிக்கும். எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதில் தேனை சேர்த்து, கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், குடலியக்கப் பிரச்சனை சரியாகிவிடும்.

தண்ணீர்
தினமும் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் டாக்ஸின்கள் அதிகமாக இருந்தாலும், அவை பருக்களை உண்டாக்கும். எனவே தண்ணீரை குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி விடுவதோடு, உடலும் நன்கு பொலிவோடு காணப்படும்.

ஷேவிங்
தினமும் ஷேவிங் செய்யாமல் இருந்தால், தாடியின் அளவானது அதிகரிப்பதோடு, முகத்தில் பிம்பிள்களும் வந்துவிடும். எனவே திருமணத்தன்று, முகத்தில் பிம்பிள் வராமல் இருப்பதற்கு, திருமணத்திற்கு ஒருமாதம் முன்பிருந்து, ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரிம் செய்யலாம்.

நைட் க்ரீம்
இரவில் படுக்கும் முன், தினமும் சருமத்திற்கு மாய்ச்சுரைசரை தடவி படுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமம் மென்மையாகும். மேலும் சருமத்தில் வறட்சி இருக்காது. அதுமட்டுமின்றி, இதனை தொடர்ந்து செய்யும் போது, இதன் பலனை எப்போதும் பெறலாம்.

சன் ஸ்கிரீன் லோசன்
ஆண்கள் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருப்பதால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மாறுவதை தடுக்கலாம்.

காபி
காப்ஃபைன் அதிகம் உள்ள பொருளான காபி மற்றும் இதர பானங்களை குடித்தால், முகத்தில் பருக்கள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகள் வரும். எனவே திருமணத்தன்று நன்கு அழகாக காணப்படுவதற்கு, கொஞ்ச நாட்கள் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பீர்
ஆல்கஹாலில் ஒன்றான பீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும். அதுவும் அளவாக குடித்தால், நன்மைகளை பெறலாம். இல்லையெனில் தொப்பை வந்துவிடுவதோடு, உடலுக்கும் உயிருக்கும் கேடு தான் விளையும்.

வியர்வை
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது மிகவும் நல்லது. ஏனெனில் வியர்க்கும் போது, உடலில் இருந்து, டாக்ஸின்கள் வெளியேறிவிடும். எனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டால், உடல் அழகாவதோடு, முகமும் நன்கு புத்துணர்ச்சியுடன்

ஃபேஸ் பேக்
பெண்கள் மட்டும் தான் ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பதில்லை. ஆண்களும் வாரத்திற்கு ஒரு முறை, வீட்டில் உள்ள மஞ்சள், வெள்ளரிக்காய், பால், கடலைமாவு போன்றவற்றை பயன்படுத்தி, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.
_ இன்டர்நெட்டில் இருந்து...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?