google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: முகநூலில் உலவும் மூடநம்பிக்கை

வியாழன், 13 செப்டம்பர், 2018

முகநூலில் உலவும் மூடநம்பிக்கை


கரி நாள் என்றால் என்ன?

தமிழ் பஞ்சாங்கங்களில் மட்டும் கரி நாள் என்றொரு விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும். தமிழ் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்
தமிழ் மாதங்களின் ஒரு குறிப்பிட்ட தேதிகள் கரி நாட்களாக தமிழ் பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளன.
சித்திரை - 6,15
வைகாசி – 7,16,17
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16,29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,4,10,17
மார்கழி – 6,9,11
தை – 1,2,3,11,17
மாசி – 15,16,17
பங்குனி – 6,15,19
கரி நாளைமாத தியாஜ்ஜியம்என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்என்றால்விலக்கப்பட வேண்டியதுஎன்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.
உதாரணமாக அக்னி நட்சத்திரம் என்பது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகும். அதாவது சூரியன் சில குறிப்பிட்ட பாகைகளில் செல்லும் நாட்கள் அக்னி நட்சத்திர நாட்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்நாட்களில் சுப காரியங்கள் தவிர்க்கபடுகின்றன. அது போல் கரி நாள் என்பதும் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகும்

சித்திரை மாதம் முதல் தேதி சூரியன் தன் சஞ்சாரத்தை மேசத்தில் தொடங்குவான். நாளுக்கு ஒரு பாகை வீதம் சூரியன் ராசிகளில் நகர்ந்து செல்வான். சித்திரை 1ல் சூரியன் மேசம் 1 வது பாகையில் இருப்பான், சித்திரை 6ல் சூரியன் மேசம் 6 வது பாகையில் இருப்பான். அதாவது ராசி மண்டலத்தில் சூரியன் நகர்ந்து செல்லும் ஒரு சில பாகைகள் (டிகிரிகள்) அசுபத்தன்மையுடையதாக நம் ரிஷிகள் நிர்ணயித்திருக்கலாம் என்பது என்னுடைய யூகம் மட்டுமே முடிவல்ல

தை மாதம் முதல் மூன்று நாட்களும் தமிழகத்தில் சூரியனுக்குரிய விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக்கருதலாம். எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாகைகளாக (டிகிரிகளாக) எடுத்துக்கொள்ளலாம்.

கரி நாட்களைப்போன்றதே தனிய நாட்களாகும். எனவே மேற்கண்ட விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?