google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நுணலுந்தன் வாயால் கெடும்

வெள்ளி, 17 அக்டோபர், 2025

நுணலுந்தன் வாயால் கெடும்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்!
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந்தன் வாயால் கெடும்.

                                                  --பழமொழி நானூறு பாடல் - 184


நல்லவளே! மணலினுள்ளே முழுகி மறைந்து கிடக்கின்ற தவளையும், தன் குரலைக் காட்டிக் கத்திக் கொண்டிருக்கிற தன்னுடைய வாயின் செயலாலேயே அழிவு எய்தும். அதுபோலவே பிறரைப் பற்றிய பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லினாலேயே தன்னைத் துயரத்தினுள் அகப்படச் செய்து கொள்வான். 

"நுணலுந்தன் வாயால் கெடும்" என்பது பழமொழி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு

  அறிஞர் அண்ணா 1963, மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆற்றிய உரை சி.என்.அண்ணாதுரை: மேன்மை பொருந்திய அவைத் தலைவர் அவர்களே…உள்...