google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: உவம உருபுகள்

செவ்வாய், 14 நவம்பர், 2023

உவம உருபுகள்

 ஒரு சொல்லை மற்றொரு சொல்லோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை அல்லது உவமானம் ஆகும். உவமையால் விளக்கப்படும் பொருள் உவமேயம் ஆகும். உவமை உவமேயம் இரண்டுக்கும் இடையில் வரும் உருபு உவம உருபு ஆகும்.


போலப் புரைய ஒப்ப உறழ

மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப

நேர நிகர அன்ன இன்ன

என்பவும் பிறவும் உவமத் துருபே

நன்னூல் சூத்திரம்  367

இலக்கண விதி

போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர என்னும் செயவெனெச்சம் பத்தும், அன்ன, இன்ன என்னம் பெயரெச்சக் குறிப்பு இரண்டும், இவை போல்வன பிறவும் உவமவுருபுகளாம்.

எடுத்துக்காட்டுகள்:

குயில் போலக் கூவினாள்

தாமரை புரையுங் காமர் சேவடி

தருமனை ஒப்பப் பொறுமை யுடையான்

கூற்றுவன் உறழும் ஆற்றலான்

மை மானும் வடிவம்

மழை கடுக்கும் கையான்

கற்கண்டு இயையப் பேசுவான்

குன்றி ஏய்க்கும் உடுக்கை

துடி நேர் இடை

சேல் நிகர்க்கும் விழி

வேய் அன்ன தோள்

தேன் இன்ன மொழி

பிறவும் உவமத்துருபே என்றதனால், போல், புரை, என்றற் றொடக்கத்து வினையடியாற் பிறத்தற்குரிய மற்றை வினையெச்ச விகற்பங்களும், பெயரெச்ச விகற்பங்களும், பொருவ, ஏற்ப, அனைய, இகல, எதிர, சிவண, மலைய முதலானவையும் உவமவுருபு களாக வரும்.


துடி இடை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...