google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கொடி ஏற்றுதலும் பறக்கவிடுதலும் வேறுபாடு

செவ்வாய், 25 ஜனவரி, 2022

கொடி ஏற்றுதலும் பறக்கவிடுதலும் வேறுபாடு

சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதைப் போல குடியரசு தினத்தன்று செய்வது இல்லை. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்படும். அதாவது கொடியானது கொடிக்கம்பத்தின் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து மேல் நோக்கி ஏற்றப்பட்டு, கொடியை மடித்திருந்த சுருக்கு அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படும். இது கொடி ஏற்றுதல் (Flag hoisting) எனப்படும் . 

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி பறக்கவிடப்படும். அதாவது, முன்னரே கம்பத்தின் உச்சியில்  ஏற்றிக் கட்டப்பட்டுள்ள  கொடி, சுருக்கு அவிழ்க்கப்பட்டுப் பறக்கவிடப்படும். இது "கொடியைப் பறக்கவிடுதல்" (flag unfurling) எனப்படும்.

We hoist the flag on Independence Day, but unfurl it on Republic Day.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...