google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பழமொழி நானூறு பாடல் எண் 369

சனி, 9 அக்டோபர், 2021

பழமொழி நானூறு பாடல் எண் 369

 பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல்


மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)

ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே

வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்

நூற்றுவரைக் கொன்று விடும்'.


     'மன வேறுபாடு' என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.

     பகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்' என்பது பழமொழி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?