google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அக்டோபர் 2021

புதன், 27 அக்டோபர், 2021

எளிய முறையில் மழை நீர் சேமிப்பு


மழை நீர் சேமிப்பு எளிய முறை
குடிநீர் பிரச்சனையை போக்க மழை நீர் சேமிப்பு
போர்வெல் மழை நீர் சேமிப்பு
How to save rain water
Rain water harvesting techniques
Save rain water
Roof Water Harvesting

புதன், 13 அக்டோபர், 2021

சிமெண்ட் வகைகள்

சிமெண்ட் பொதுவாக இரு வகைப்படும்.

(1) ஹைட்ராலிக் சிமெண்ட்
(2) ஹைட்ராலிக் அல்லாத சிமெண்ட்

ஹைட்ராலிக் சிமெண்ட், நீரின் உதவியுடன் கடினப்படும்.

ஹைட்ராலிக் சிமெண்டை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருள் சுண்ணாம்பு,களிமண் மற்றும் ஜிப்சம் ஆகும் . ஹைட்ராலிக் சிமெண்ட் தயாரிக்க இந்த மூலப்பொருள் மிக அதிக வெப்பநிலையில் எரிக்கப்படுகிறது .
ஹைட்ராலிக் சிமெண்ட் நீருடன் வினைபுரிவது மட்டும் அல்லாமல் ,நீர் எதிர்ப்பு திறன் கொண்டபொருளையும் உண்டாக்குகிறது. மேலும் ஹைட்ராலிக் சிமெண்ட் தயாரிக்க சிமெண்ட் க்ளிங்ருடன் , கால்சியம் சல்பேட் கலந்த மூலக்கூறில் நீரேற்றம் செய்யப்பட்ட கால்சியம் சிலிகேட் ஒன்றாக அரைக்கப்படுகிறது .ASTM C150

ஹைட்ராலிக் அல்லாத சிமெண்ட்
இந்த ஹைட்ராலிக் அல்லாத சிமெண்ட் இறுக, நீர் தேவை இல்லை. இது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடின் (CO2 ) உதவியுடன் கடினத் தன்மையை  அடைகிறது. இந்த வகை சிமெண்ட் இறுக வறண்ட சூழ்நிலை தேவை. 

ஹைட்ராலிக் அல்லாத சிமெண்டை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்கள் சுண்ணாம்பு, ஜிப்சம் ,பிளாஸ்டர்கள் மற்றும் ஆக்ஸிகுளோரைடு. 
எடுத்துக்காட்டு: மூலக்கூறு நீரேற்றம் செய்யப்பட்ட சுண்ணாம்பு(Slaked lime) அதாவது கால்சியம் ஹைட்ராக்ஸைடு (Ca(OH)₂) ஒரு ஹைட்ராலிக் அல்லாத சிமெண்ட் ஆகும்.

ஹைட்ராலிக் சிமெண்ட்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன .அவை பலவகைப்படும். அவற்றுள் சில:

1. சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC)
2. போர்ட்லேண்ட் போசோலானா சிமெண்ட் (PPC)
3. அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட்(Rapid hardening cement)
4. விரைவில் இறுகும் சிமெண்ட் (Quick Hardening Cement)
5. குறைந்த வெப்ப சிமெண்ட்(Low heat Cement)
6. சல்பேட்டை எதிர்க்கும் சிமெண்ட்(SRC)
7. இரும்பு உருக்கு உலை கசடு கலந்த சிமெண்ட்(Blast furnace Slag Cement)
8. உயர் அலுமினா சிமெண்ட்(High Alumina Cement)
9. வெள்ளை சிமெண்ட்(White Cement)
10. காற்று நுழையும் சிமெண்ட்(Air entraining Cement)
11. விரிவடையும் சிமெண்ட் (Expansive Cement)
12. நீர் உறிஞ்சாத சிமெண்ட்(hydrographic cement)

1. சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC)

சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிமெண்ட் வகையாகும், இது எல்லாவித பொதுவான கான்கிரீட் கட்டுமானங்களுக்கும் ஏற்றது. இது உலகெங்கிலும் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் வகையான சிமெண்ட் ஆகும். இதன் உலகளாவிய உற்பத்தி ஆண்டுக்கு 3.8 மில்லியன் கனமீட்டர் ஆகும். இந்த சிமெண்ட் அனைத்து வகையான கான்கிரீட் கட்டுமானத்திற்கும் ஏற்றது. இந்த சிமெண்ட் 33,43 மற்றும் 53 என மூன்று வகைகளில் தயாரிக்கப்படுகிறது .இதில் 53 பரவலாக உபயோகப்படுத்தப்படும் போர்ட்லேண்ட் சிமெண்ட் ஆகும்.

2. போர்ட்லேண்ட் போசோலானா சிமெண்ட்(PPC)

போர்ட்லேண்ட் சிமெண்டுடன் போஸோலனிக் கிளிங்கரை அரைத்து போர்ட்லேண்ட் போசோலானா சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. ஜிப்சம் அல்லது கால்சியம் சல்பேட் சேர்ப்பதன் மூலமோ, போஸோலனாவைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது போர்ட்லேண்ட் சிமெண்ட் மற்றும் சிறந்த பொசோலானாவை நெருக்கமாகவும் சீராகவும் கலப்பதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது . இந்த சிமெண்ட சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டுடன் ஒப்பிடும்போது கான்கிரீட் மீதான பல்வேறு இரசாயன தாக்குதல்களுக்கு அதிக எதிர்ப்பைக் கொண்டுள்ளது. இதனால் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது கடல் கட்டமைப்புகள், கழிவுநீர் பணிகள், மற்றும் நீருக்கடியில் கான்கிரீட் கட்டமைப்பு, பாலங்கள், கப்பல்,அணைகள் மற்றும் வெகுஜன கான்கிரீட் பணிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

3. அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட் (Rapid Hardening Cement)

அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட் ஆரம்ப நாட்களில் அதிக வலிமையை துரிதமாக அடைகிறது . இது எங்கு ஃபார்ம்வொர்க்குகள் துரிதமாக அகற்றப்பட வேண்டுமோ அந்த கான்கிரீட் கலவையில் சாதாரண போர்ட்லேண்ட் சிமென்டிற்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது .இந்த சிமெண்ட் தயாரிப்பில் சுண்ணாம்பு அளவை அதிகரித்து மற்றும் அதிக c3s சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை ஆரம்ப கட்டத்திலேயே சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட்டை விட அதிக வலிமை அடைய உதவுகிறது.
மூன்று நாட்களில் அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட்டின் வலிமை அதே நீர்-சிமெண்ட் விகிதத்துடன் சாதாரண போர்ட்லேண்ட்(OPC ) சிமெண்ட்டின் ஏழு நாட்கள் வலிமைக்கு நிகரானது. எனவே, இந்த சிமெண்டின் நன்மை என்னவென்றால், ஃபார்ம்வொர்க்கை முன்பே அகற்றலாம். இது கட்டுமான விகிதத்தை அதிகரிக்கிறது. மேலும் ஃபார்ம்வொர்க் செலவைச் சேமிப்பதன் மூலம் கட்டுமான செலவைக் குறைக்கிறது.
அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட் முன்னரே தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானம், சாலை பணிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

4. விரைவில் இறுகும் சிமெண்ட்(Quick Hardening Cement)

விரைவாக இறுகும் சிமெண்ட் மற்றும் அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், விரைவாக இறுகும் சிமெண்ட் துரிதமாக இறுகி கடினமாகும். 
அதிவிரைவாக கடினமாகும் சிமெண்ட் விரைவாக கடினமாவதுடன் ,அதிக வலிமையையும் ஆரம்ப நாட்களிலேயே பெறுகிறது. இரண்டு வகை சிமெண்டும் ஃபார்ம்வொர்க்குகளைதுரிதமாக அகற்ற பயன்படுத்தலாம்.
எங்கு பணிகள் மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டுமோ மற்றும் நிலையான அல்லது ஓடும் நீரில் கான்கிரீட் பணிகள் நடைபெறுகின்றதோ அங்கு விரைவாக இறுகும் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

5. குறைந்த வெப்ப சிமெண்ட்(Low Heat Cement)

C2S விகிதத்தை அதிகரிப்பதன் மூலமும் ட்ரைகால்சியம் அலுமினேட் சதவீதத்தை 6% க்கும் குறைவாக பராமரிப்பதன் மூலமும் குறைந்த வெப்ப சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. கான்க்ரீடில் சிறிய அளவு ட்ரை கால்சியம் அலுமினேட் சேர்ப்பதன் மூலம் கான்க்ரீட்டின் நீரேற்ற வெப்ப நிலையை வெகுவாக குறைக்கிறது. இது புவிஈர்ப்பு கோட்பாட்டில் உருவாக்கப்படும் அணைகள் கட்டுமானத்தில் சிறிய விரிசல் ஏதும் விழாமல் கட்டமைக்க பயன்படுத்தப்படுகிறது .
இந்த சிமெண்ட் சல்பேட்டுடன் குறைந்த வினைத்திறன் மற்றும் அதிக எதிர்ப்பு திறன் கொண்டது. இதன் ஆரம்ப கால இறுகும் நேரம் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டை விட அதிகம்.

6. சல்பேட்டை எதிர்க்கும் சிமெண்ட்(SRC)

கான்கிரீட் மீதான சல்பேட் தாக்குதலின் ஆபத்தைக் குறைக்க சல்பேட் எதிர்ப்புச் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது, இதனால் அதிக சல்பேட் உள்ள மண்ணில் அடித்தளம் கட்டமைக்க பயன்படுத்தப்படுகிறது . இந்த சிமெண்டில் C3A மற்றும் C4A குறைவாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வகை சிமெண்ட் சல்பேட் அதிகம் கொண்ட மண் மற்றும் நீரோட்டத்தில் கட்டப்படும் கால்வாய்கள், குழாய் பாலங்கள், தடுப்பு சுவர்கள் மற்றும் நீர் குழாய்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது .

7. இரும்பு உருக்கு உலை கசடு கலந்த சிமெண்ட் (Blast Furnace Slag Cement)

கிளிங்கர்களை சுமார் 60% கசடுடன் அரைப்பதன் மூலம் இரும்பு உருக்கு உலை கசடு கலந்த சிமெண்ட் பெறப்படுகிறது . இதன் பண்புகள் பெரும்பாலும் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டுடன் ஒத்துப்போகிறது. பொருளாதார சிக்கனம் தேவைப்படும் இடங்களில் இந்த சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

8. உயர் அலுமினா சிமெண்ட்

பாக்சைட்(Bauxite) மற்றும் சுண்ணாம்பு கலவையை உருக்கி, கிளிங்கருடன் அரைப்பதன் மூலம் உயர் அலுமினா சிமெண்ட் பெறப்படுகிறது. இதன் ஆரம்ப இறுகு நேரம் சுமார் 3.5 மணி நேரம் மற்றும் இறுதி இறுகும் நேரம் 5 மணி நேரம் ஆகும் .இந்த சிமெண்டின் வலிமை சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட்டை விட மிக உயர்ந்தது .அதிக வேலைத்திறன் கொண்டது. கான்கிரீட் அதிக வெப்பநிலை, உறைபனி மற்றும் அமில நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

9. வெள்ளை சிமெண்ட் (White Cement)

இது இரும்பு ஆக்சைடு இல்லாத மூலப்பொருட்களிலிருந்து
தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வகை சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் ஆகும். இது வெள்ளை நிறத்தில் இருக்கும். இது விலை உயர்ந்தது .
இந்த சிமெண்ட் கட்டிட உட்புற மற்றும் வெளிப்புற சுவர், தரை, நடைபாதை, மொட்டை மாடி வெளிப்பூச்சு ,தோட்டம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றின் அழகு வேலைப்பாடு நிறைந்த கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த சிமெண்டுடன் பல வண்ண நிறமிகள் 5-10% கலந்து பல வண்ணங்களில் அழகு வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது .

10. காற்று உட்புகு சிமெண்ட் (Air Entraining Cement)

கிளிங்கரை அரைக்கும் போது பிசின்கள், பசைகள், சல்பேட்டுகளின் சோடியம் உப்புகள் போன்ற உள் காற்று நுழையும் மூலபொருட்களை சேர்ப்பதன் மூலம் காற்று நுழையும் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது .
இந்த வகை சிமெண்ட் குறிப்பாக குறைவான நீர்-சிமெண்ட் விகிதத்துடன் வேலைத்திறனை மேம்படுத்துவதற்கும், கான்கிரீட்டின் உறை தன்மை எதிர்ப்பை மேம்படுத்துவதற்கும் மிகவும் பொருத்தமானது.

11. விரிவடையும் சிமெண்ட் (Expansive Cement)

விரிவடையும் சிமெண்ட் நீர் சேர்த்ததும் சிறிது நேரத்தில் விரியும். கடினமானவுடன் மீண்டும் சுருங்காது. ஆகவே இந்த சிமெண்ட் நங்கூர ஆணி பதிப்பதற்கும் ,முன்னரே அழுத்தப்பட்டு உருவாக்கப்படும் கான்க்ரீட் குழாய்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது .
12. ஹைட்ரோகிராஃபிக் சிமெண்ட்
(Hydrographic Cement)

நீர்-விரட்டும் இரசாயனங்கள் கலப்பதன் மூலம் ஹைட்ரோகிராஃபிக் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது . இதுஅதிக வேலை திறன் மற்றும் வலிமையைக் கொண்டுள்ளது. இந்த சிமெண்ட் நீரை உறிஞ்சாது. எனவே, இது மழை அதிகம் பெய்யும் இடங்களில் கட்டுமானத்திற்கு ஏற்றது .
இந்த சிமெண்ட் நீர் தேக்கத் தொட்டி, அணை போன்ற நீர் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Different Types of Cement

1. Ordinary Portland Cement (OPC)
Ordinary Portland Cement also known as OPC is a type of cement that is manufactured and used worldwide. It is widely used for all purposes including:

Concrete: When OPC is mixed with aggregates and water, it makes concrete, which is widely used in the construction of buildings 
Mortar: For joining masonry 
Plaster: To give a perfect finish to the walls
Cement companies in Malaysia offer OPC in three different grades, namely grades 33, 43, and 53.  

Besides the aforementioned purposes, Ordinary Portland cement is also used to manufacture grout, wall putty, solid concrete blocks, AAC blocks, and different types of cement. 

 
2. Portland Pozzolana Cement (PPC)
To prepared PPC or Portland Pozzolana cement, you need to grind pozzolanic clinker with Portland cement.

PPC has a high resistance to different chemical assaults on concrete. It is widely used in construction such as:

Marine structures
Sewage works
Bridges
Piers
Dams
Mass concrete works
 
3. Rapid Hardening Cement
Cement suppliers in Malaysia also offer rapid Hardening cement. Rapid Hardening Cement is made when finely grounded C3S is displayed in OPC with higher concrete.
    
It is commonly used in rapid constructions like the construction pavement.   

 
4. Extra Rapid Hardening Cement
As the name suggests, Extra rapid hardening cement gains strength quicker and it is obtained by adding calcium chloride to rapid hardening cement. 

Extra rapid hardening cement is widely used in cold weather concreting, to set the cement fast. It is about 25% faster than that of rapid hardening cement by one or two days. 

 
5. Low Heat Cement
Cement manufacturers in Malaysia offers low heat cement that is prepared by keeping the percentage of tricalcium aluminate below 6% and by increasing the proportion of C2S. 

This low heat cement is used in mass concrete construction like gravity dams. It is important to know that it is less reactive and the initial setting time is greater than OPC. 

 
6. Sulfates Resisting Cement
This type of cement is manufactured to resist sulfate attack in concrete. It has a lower percentage of Tricalcium aluminate. 

Sulfates resisting cement is used for constructions in contact with soil or groundwater having more than 0.2% or 0.3% g/l sulfate salts respectively.

It can also be used in concrete surfaces subjected to alternate wetting and drying like bridge piers. 

 
7. Quick Setting Cement
Cement suppliers in Malaysia also offer quick setting cement which sets faster than OPC but the strength remains the same. In this formula, the proportion of gypsum is reduced. 

Quick setting cement is used for constructions that need a quick setting, like underwater structures and in cold and rainy weather conditions. 

 
8. Blast Furnace Slag Cement
This type of cement is manufactured by grinding the clinker with about 60% slag and it is similar to Portland cement. It is used for constructions where economic considerations are important. 

 
9. High Alumina Cement
High alumina cement is obtained by mixing calcining bauxite and lime with clinker during the manufacturing process of OPC. 

To be considered high alumina cement, the total amount of alumina content should be at least 32%, and the ratio of the weight of alumina to lime should be kept between 0.85 to 1.30. 

The most common uses are in constructions that are subject to high temperatures like a workshop, refractory, and foundries. 

 
10. White Cement
This type of cement is manufactured by using raw materials that are free from iron and oxide. White cement needs to have lime and clay in a higher proportion. It is similar to OPC but it is more expensive. 

சனி, 9 அக்டோபர், 2021

பழமொழி நானூறு பாடல் எண் 369

 பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல்


மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)

ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே

வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்

நூற்றுவரைக் கொன்று விடும்'.


     'மன வேறுபாடு' என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.

     பகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்' என்பது பழமொழி.



பழமொழி நானூறு பாடல் எண் 361

 அறிந்து செய்யும் அறியாமைச் செயல்

''முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; - சொல்லின்

நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.''

_முன்றுறை அரையனார்

செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும் மயிலுக்குப் போர்வையினையும் முன் காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமானால், சான்றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக.

'பாரியும் பேகனும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்' என்று புலவர்கள் போற்றுவர். அவை கொடுத்தற்கு உரியன அன்றென அறிந்தும் அறியாதார் போல அவர்கள் கொடுத்தலால் அவர்கள் சிறப்படைந்தனர். சான்றோர் பெருமை இதனால் கூறப்பட்டது. 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப் பெற்றது.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?