சனி, 15 மே, 2021
ஞாபகம்
நான் எலிமென்ட்டரி ஸ்கூலில் படிக்கும்போது ஒரு இட்லி ஒரு அணா. சர்க்கரை காஃபி 8 பைசா. சீனி காஃபி 10 பைசா. ஹைஸ்கூலில் படிக்கும்போது தெரு விளக்கு வெளிச்சம் படிக்க உதவிற்று. காலை 5 மணிக்கே உடுப்பி ஹோட்டலில் அனந்தநாராயணன் வாத்தியார் முந்திரி மினுமினுக்கும் வெண் பொங்கலைச் சுடச்சுடச் சாப்பிடுவார். கறுப்பாய் இருக்கும் கிருஷ்ணய்யர் பாட்டுப் பாடிக்கொண்டே சப்ளை செய்வார். பார்சல் பெருமாள் வாழை இலையைக் கிழித்து பார்சல் போடும் ஸ்டைல் ஒரு தனியழகு. 30 பைசாவுக்கு பார்சல் பொங்கல் வாங்கினால் மதியம் சாப்பாட்டுக்குப் போதும். அரைச் சாப்பாடு 60 பைசா. முழுச் சாப்பாடு ஒரு ரூபாய். V.V. ஹைஸ்கூலில் வாலிபால் விளையாடிவிட்டு இருட்டும் நேரத்தில் மெய்யப்பா டாக்கீஸ் குண்டுப் பிள்ளை ஹோட்டலில் களைப்பு நீங்க 10 பைசா ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் அடாடா என்ன மணம் என்ன ருசி என்ன சத்து. அதைக் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது நம்மிடம் நிறைந்திருந்தது திமிர், தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏன் இப்படி?
இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
நந்தனார் படத்திலிருந்து தண்டபாணி தேசிகர் வள்ளலாரின் திருவருட்பா பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மற...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.