google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பாரதியாரின் தேசிய கீதங்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பாரதியாரின் தேசிய கீதங்கள்


1947ஆம் ஆண்டு AVM தயாரிப்பாக வெளிவந்த T. R. மகாலிங்கம் நடித்த 'நாம் இருவர்' திரைப்படத்தில் T. R. மகாலிங்கம் பாடிய பாடல் 'விடுதலை விடுதலை விடுதலை '. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைக்கு இசை R. சுதர்சனம் . மகாகவி பாரதியாரின் கவிதைகளின் காப்புரிமையை AVM. செட்டியார் வாங்கியிருந்ததால் இந்தப் படத்திலும் இதற்கு அடுத்து வந்த 'வேதாள உலகம்' படத்திலும் மகாகவியின் பாடல்கள் பெரிதும் பயன்படுத்தியிருந்தார். சுதந்திரப் பள்ளு

From: https://www.youtube.com/watch?v=K-w6JouUPYQ&ab_channel=APITamilSongs

ராகம்பிலஹரி

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

 

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே

வாழி கல்வி செல்வம் எய்தி

மனம கிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்

மானமாக வாழ்வமே! (விடுதலை)

 

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை யைக்கொ ளுத்துவோம்

வைய வாழ்வு தன்னில் எந்த

வகையி னும்ந மக்குள்ளே

தாதர் என்ற நிலைமை மாறி

ஆண்க ளோடு பெண்களும்

சரிநி கர்ச மான மாக

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...